×

அமைச்சர் செந்தில் பாலாஜியின் டுவிட்டர் கணக்கு மீட்பு

 

மர்ம நபர்களால் முடக்கப்பட்ட மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் டுவிட்டர் கணக்கு இன்று மீட்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் டுவிட்டர் கணக்கினை 2 லட்சத்திற்கு அதிகமானோர் பின் தொடர்ந்து வருகின்றனர்.  பரபரப்பான அரசியல் கருத்துக்கள், வாதங்கள்,  சவால்கள் போன்றவற்றை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார் செந்தில் பாலாஜி.  இதனால் அவரின் டுவிட்டர் கணக்கு எப்போதும் பரபரப்பாகவே இருக்கும். இந்நிலையில், செந்தில் பாலாஜி டுவிட்டர் கணக்கு மர்ம நபர்களால் முடக்கப்பட்டது.  நேற்று இரவு மர்ம நபர்கள் அவரது டுவிட்டர் கணக்கு ஹேக் செய்து ‘வேரியோரியஸ்’ என பெயர் மாற்றம் செய்துள்ளனர்.  அதில் கிரிப்டோ கரன்சி தொடர்பான பதிவுகளை பதிவிட்டுள்ளனர். கொரோனாவுடன் போராடும் மக்களுக்கு உதவ நிதி திரட்ட போவதாகவும்,  அதற்கு பிரிட்டோ கரன்சி மூலம் நிதி அளிக்க வேண்டும் என்றும் மர்ம நபர்கள் பதிவிட்டு இருந்தனர்.


  
இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் டுவிட்டர் கணக்கு இன்று மீட்கப்பட்டுள்ளது. டுவிட்டர் பக்கத்தில் மர்ம நபர்கள் பதிவிட்டிருந்த பதிவுகளும் நீக்கப்படுள்ளது. டுவிட்டர் பக்கம் மீட்கப்பட்டதை அடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜி டுவிட்டர் பதிவில் கூறியதாவது, அன்புள்ள அனைவருக்கும், எனது டுவிட்டர் கணக்கு இப்போது மீட்டெடுக்கப்பட்டு மீட்டமைக்கப்பட்டுள்ளது. உங்கள் அக்கறைக்கும் அன்பான ஆதரவிற்கும் நன்றி. மேலும், டுவிட்டர் பக்கத்தை மீட்டெடுக்க உதவிய மாநில சைபர் கிரைம் பிரிவு, டுவிட்டர் அதிகாரிகள் மற்றும் அனைவருக்கும் மிக்க நன்றி. இவ்வாறு பதிவிட்டுள்ளார்.