பஞ்சமி நிலங்கள் மீட்பு – தமிழ்நாடு அரசுக்கு சீமான் அடுக்கடுக்கான கேள்விகள்!!
Oct 6, 2022, 11:47 IST
ஆதித்தமிழ்க்குடி மக்களுக்கு வழங்கப்பட்ட 12 இலட்சம் ஏக்கர் பஞ்சமி நிலங்கள் இப்போது எங்கே? என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது ட்விட்டர் பக்கத்தில், "ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அன்றைய சென்னை மாகாணத்தில் வாழ்ந்த ஆதித்தமிழ்க்குடி மக்களுக்கு வழங்கப்பட்ட 12 இலட்சம் ஏக்கர் பஞ்சமி நிலங்கள் இப்போது எங்கே? 55 ஆண்டுகால திராவிடக் கட்சிகளின் சமூகநீதி ஆட்சிக்காலத்தில்தான் பெருமளவு பஞ்சமி நிலங்கள் ஆதித்தமிழ்க்குடி மக்களை ஏமாற்றி முறைகேடாக அபகரிக்கப்பட்ட நிலையில் அவற்றை மீட்க தமிழ்நாடு அரசு இதுவரை எடுத்த நடவடிக்கைகள் என்ன?