×

ராமஜெயம் கொலை வழக்கு- உண்மை கண்டறியும் சோதனை.. 12 பேருக்கு சம்மன்!

 

ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக 12 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை செய்ய சிறப்பு புலனாய்வு குழுவினர் திட்டமிடப்பட்டுள்ளது. நவம்பர் 1 ஆம் தேதி 12 பேர் நீதிமன்றத்தில் ஆஜராக சம்மன் அனுப்பியுள்ளது.

நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரரும், தொழிலதிபருமான ராமஜெயம் கடந்த 2012 ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். பத்தாண்டுகளாக அந்த கொலை குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இவ்வழக்கு தொடர்பாக விசாரணை மேற்கொள்ள சி.பி.சி.ஐ.டி சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது. சி.பி.சி.ஐ.டி எஸ்.பி. ஜெயக்குமார் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தமிழ்நாட்டில் முக்கிய கொலை குற்றவாளிகள், ரவுடிகள் என பல்வேறு தரப்பினரிடம் விசாரணை மேற்கொண்டனர். இவ்வழக்கு தொடர்பாக கடந்த 22 ஆம் தேதி சி.பி.சி.ஐ.டி இயக்குனர் ஷகில்வக்தர் திருச்சியில் சிறப்பு புலனாய்வு குழுவினருடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்நிலையில் அவ்வழக்கு தொடர்பாக மோகன்ராம், சாமி ரவி, நரைமுடி கணேசன்,  சத்யராஜ், மாரிமுத்து, தினேஷ், திலீப், தென்கோவன் என்கிற சண்முகம், ராஜ்குமார், சுரேந்தர், சிவகுணசேகரன், கலைவாணன்  உள்ளிட்ட 12 பேருக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்த திட்டமிட்டுள்ளனர். எனவே இவர்கள் அனைவரும் வருகிற நவம்பர் 1ஆம் தேதி அன்று  நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என அவர்கள் அனைவருக்கும் திருச்சி நீதிமன்றம் சம்மன் அனுப்பி உள்ளது.