×

தமிழகம் முழுவதும் 3 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும்

 

 தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மிக கனமழை பெய்து வருகிறது.   இந்த கனமழை தமிழகம் முழுவதும் 3 மணி நேரத்திற்கு நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

 சென்னையில் கும்மிருட்டுடன் மழை கொட்டி தீர்த்து வருகிறது.  அதே போல் சென்னை புறநகர் பகுதிகளிலும் இரவு முதல் தற்போது வரைக்கும் மழை விட்டு விட்டு வெளுத்து வாங்கி வருகிறது.

வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரமடைந்து வருகிறது .  கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக தமிழகம் முழுவதும் பரவலாக மிதமான மழை,  மிக கனமழையும் பெய்து வருகிறது.  இந்த நிலையில் இன்று காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்பதால் இந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருக்கிறது.    அதேபோல் பல மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. 

 சென்னை, செங்கல்பட்டு, வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், கடலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ஆகிய 15 மாவட்டங்களில் மற்றும் புதுச்சேரி , காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் , மிக கனமழையும் பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.  தர்மபுரி, நாமக்கல், கரூர், சேலம், ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தேனி, மதுரை, விருதுநகர், திண்டுக்கல், கோவை, நீலகிரி, திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது .

அதே போல் தமிழகம் முழுவதும் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்த மிக கனமழை அடுத்த 3 மணி நேரத்திற்கு நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.