×

மே 5-ம் தேதி 3,119 மையங்களில் பொதுத்தேர்வுகள் தொடக்கம்!

 

தமிழ்நாட்டில் 2 ஆண்டுகளுக்கு பின் மே 5-ம் தேதி 3,119 மையங்களில் பொதுத்தேர்வுகள் தொடங்கவுள்ளது. 


கொரோனா வைரஸ் முதல் அலை காரணமாக 2020-21 ஆம் கல்வியாண்டு கடுமையாக பாதிக்கப்பட்டது. 2021-22 ஆம் கல்வியாண்டும் கொரோனா வைரஸ் பரவல் பாதிப்புக்கு தப்பவில்லை. இரண்டாம் அலை காரணமாக நடப்பு கல்வியாண்டு ஜூன் மாதத்திற்கு பதிலாக செப்டம்பரில் தான் தொடங்கியது.  மூன்றாவது அலையால் மூடப்பட்ட பள்ளிகள் பிப்ரவரி மாதத்தில் தான் மீண்டும் திறக்கப்பட்டன. அதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டது உண்மை தான். ஆனால், அதையே காரணம் காட்டி குழந்தைகள் பயிலும் வகுப்புகளுக்குக் கூட மே 13-ஆம் தேதி வரை வகுப்புகளும், தேர்வுகளும் நடத்தப்படும் என பள்ளிக்கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது. 

மேலும் 10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கு கடந்த வாரம் முதல் மாணவர்களுக்கு செய்முறை தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வந்தது. அந்த தேர்வுகள் இன்றுடன் நிறைவடைந்த நிலையில், மே 5 ஆம் தேதி முதல் மாதம் பொதுத்தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுத்தேர்வுகள் 3,119 மையங்களில் நடைபெறும் என தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. மாநிலம் முழுவதும் 26.76 லட்சம் மாணவ, மாணவிகள் பொதுத்தேர்வை எழுதுகின்றனர். 12 ஆம் வகுப்புகளுக்கு மே.5 ஆம் தேதியும், 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 9 ஆம் தேதியும், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 30ம் தேதியும் பொதுத்தேர்வுகள் தொடங்கவுள்ளன.