×

#Justin வரும் 11 ஆம் தேதி தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி

 

 பிரதமர் நரேந்திர மோடி வருகிற  11 ஆம் தேதி தமிழகம் வருகிறார்.

காந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகம்  1956-ல், ஒரு சிறிய கிராமப்புறக் கல்லூரியாக தொடங்கப்பட்டு, 1976-ல் நிகர்நிலைப் பல்கலைகழகமாக முன்னேற்றம் அடைந்தது. இப்பல்கலைக்கழகம் ஏறத்தாழ 200 ஏக்கர் பரப்பளவில் நிறுவப்பட்டுள்ளது.  முனைவர் டி.எசு. சௌந்தரம் மற்றும் முனைவர் சி.ராமச்சந்திரன் ஆகியோர் இணைந்து இந்நிறுவனத்தை உருவாக்கினர். இந்நிறுவனம் தேசத் தந்தை மகாத்மா காந்தியின் அறிவு மற்றும் வேலை ஆகியவை தனித்தனியானவை அல்ல என்று குறிப்பிடுகின்ற ஒரு கொள்கையால் அமைந்த சர்வோதயக் கல்வி முறையைத் தொடர்வதற்காக இதை அவர்கள் உருவாக்கினர். டெல்லியை சேர்ந்த பல்கலைக்கழக மானியக் குழு அதன் மூன்றாவது சட்டப் பிரிவு 1956 இன் கீழ் 1976-ஆம் ஆண்டு காந்திகிராம கிராமப்புற பல்கலைக்கழகத்தை நிகர்நிலைப் பல்கலைக்கழகம் என அறிவித்தது. இதன்படி 1976-ஆம் ஆகஸ்ட்  மாதம் 3 ஆம் நாள் மத்திய அரசால் தன்னாட்சி அதிகாரம் பெற்ற ஒரு பல்கலைக்கழகமாக காந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகம் மாறியது. இப்பல்கலைக் கழகம், பல்கலைக்கழக மானியக் குழுவால் முழுமையாக நிதியளிக்கப்படுகிறது.

இந்நிலையில் பிரதமர் மோடி திண்டுக்கல் காந்தி கிராமம் கிராமிய நிகர்நிலைப் பல்கலை. பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க நவ.11ம் தேதி தமிழகம் வருகிறார். முன்னதாக பிரதமர் மோடி வருகிற 30ஆம் தேதி பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குருபூஜையை கலந்துகொள்வதாக செய்தி வெளியான நிலையில் அதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மறுப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.