"இரவு 10 மணிக்குப் பிறகு இலவச பயணம்" பெண் ஆட்டோ ஓட்டுநருக்கு குவியும் பாராட்டு!!
சென்னையில் இரவு 10 மணிக்கு பிறகு பெண்களுக்கும் ,முதியவர்களுக்கும் இலவச ஆட்டோ சவாரி வழங்கும் பெண் ஆட்டோ ஓட்டுநருக்கு பாராட்டு குவிந்து வருகிறது.
பெண் ஆட்டோ ஓட்டுநர் ராஜி கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்டோ ஓட்டி வருகிறார். வசதியான குடும்பத்தில் இல்லாமல் இருந்தாலும் தன்னால் முடிந்த அளவிற்கு மற்றவர்களுக்கு உதவி வருகிறார்.
பிரசவத்திற்கு இலவசம் என்று பல ஆட்டோக்களின் பின்னல் எழுதி இருப்பதை நம்மால் காண முடியும். ஆனால் உண்மையில் பெண்களுக்கு, முதியவர்களுக்கு ,அரசு பள்ளி மாணவிகளுக்கு என இலவசமாக ஆட்டோ ஓட்டி சேவையாற்றி வருகிறார் ஆட்டோ ஓட்டுநர் ராஜி.
குறிப்பாக இரவு 10 மணிக்கு மேல் மாணவிகள் ,முதியவர்கள் ,பெண்கள் ஆகியோருக்கு இலவசமாக ஆட்டோ சவாரி வழங்கும் அவர், அவசர காலங்களில் மருத்துவமனைக்கு செல்லவும் உதவி புரிகிறார்.அத்துடன் கல்வி கட்டணம் செலுத்த முடியாமல் அவதிப்படும் பெண் குழந்தைகளுக்கு தன்னால் முடிந்த கல்வி கட்டணத்தை செலுத்தும் சேவையையும் ராஜி மேற்கொண்டு வருகிறார். பணம் படைத்தவர்களே, இல்லாதவர்களுக்கு கொடுத்து உதவ தயங்கும் இந்த காலகட்டத்தில், சொந்த காலில் உழைத்து சம்பாதித்து வரும் இந்த நடுத்தர குடும்பத்து பெண், மற்றவர்களுக்கும் உதவி செய்து வருவது பாராட்டத்தக்கது.