×

நிலக்கரி தட்டுப்பாடு : மேட்டூர் அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி நிறுத்தம்..

 

 சேலம் மாவட்டம்  மேட்டூரில்  உள்ள அனல் மின் நிலையத்தில் நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக மின் உற்பத்தி நிறுத்தபட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள 173 அனல் மின் நிலையங்களிலுமே  நிலக்கரி கையிருப்பு வேகமாக குறைந்து வருகிறது.  தமிழகத்தைப் பொறுத்தவரை ஏற்கனவே தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் நிலக்கரி கையிருப்பு இல்லாததால் அவ்வபோது மின் உற்பத்தி நிறுத்தப்படுகிறது.. மத்திய அரசிடம் இருந்து வரும் நிலக்கரிக்கு ஏற்பவே தூத்துக்குடியில் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

கோடை வெயில் சுட்டெரிப்பதால் ஒருபுறம் மின் தேவையும் அதிகரித்திருக்கிறது. இதனால் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் மின்வெட்டும் ஏற்படுகிறது.  நிலக்கரி தட்டுப்பாட்டைப் போக்க நாள்தோறும் சராசரியாக 400க்கும் அதிமான சரக்கு பெட்டிகளை இணைத்து ரயில்கள் மூலம் நிலக்கரியை விநியோகிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது,

இந்த நிலையில் நிலக்கரி தட்டுப்பாட்டால் , மேட்டூர் அனல்மின் நிலையத்தில் 3 அலகுகளில் மின்உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. மேட்டூர் அனல்மின் நிலையத்தில்  210 மெகா வாட் திறன் கொண்ட 4 அலகுகளும்,   600 மெகா வாட் திறன் கொண்ட 1 அலகும் என 2 பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன.   இங்கு  நாளொன்றுக்கு 1400 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் நிலையில்,  தற்போது நிலக்கரி பற்றாக்குறை காரணமாக 3 அலகுகளில் மின் உற்பத்தி நிறுத்தம் செய்யப்பட்டிருக்கிறது.  தற்போது குறைந்த அளவு நிலக்கரி மட்டுமே கையிருப்பு இருப்பதால் 1 அலகில் மட்டும் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.