×

"ஆ.ராசா மிகவும் கீழ்த்தரமாக பேசியிருப்பது கண்டனத்திற்குரியது" - தினகரன் தாக்கு!!

 

பொது வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு நாவடக்கம் தேவை என்று தினகரன் தெரிவித்துள்ளார். 

திமுக நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் ஆ. ராசா சமீபத்தில் இந்துக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருந்தார் . ஆ. ராசாவின் கருத்தை அரசியல் கட்சித் தலைவர்கள் கடுமையாக எதிர்த்த நிலையில் ஆ.ராசாவை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்று கோரிக்கையும் வலுத்து வருகிறது .அத்துடன் ஆ. ராசா மீது நடவடிக்கை எடுக்க கோரி காரைக்கால் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் விஸ்வ இந்து பரிஷத் தலைவர் வெங்கடாசலம் புகார் அளித்துள்ளார்.

இந்நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர்  டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், "இந்துமதத்தைப் பின்பற்றுபவர்களை இழிவுபடுத்தும் விதமாக தி.மு.க.வின் துணைப் பொதுச்செயலாளர் திரு.ஆ.ராசா மிகவும் கீழ்த்தரமாக பேசியிருப்பது கண்டனத்திற்குரியது. மத உணர்வுகளைத் தூண்டும் இத்தகைய பேச்சுகளை அனுமதிப்பது சமூக அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும்.  பொது வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு நாவடக்கம் தேவை. தி.மு.க அரசின் தோல்விகளைத் திசை திருப்புவதற்காகவே ராசா போன்றவர்களை பேசவிட்டு, திரு.ஸ்டாலின் வேடிக்கைப் பார்க்கிறாரோ? என்ற சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.