×

அதிகரிக்கும் வைரஸ் காய்ச்சல்; 1- 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஒருவாரம் விடுமுறை 

 

சுகாதாரத்துறை இயக்குநர் ஸ்ரீராமலு, குழந்தைகளுக்கு வைரஸ் காய்ச்சல் அதிகரிப்பதால் 1 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி குழந்தைகளுக்கு ஒரு வாரம் விடுமுறை விடுமாறு பள்ளி கல்வித்துறைக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.


அந்த கடிதத்தில், “கடந்த 10 நாட்களாக 50 சதவீத குழந்தைகளுக்கு காய்ச்சல், இருமல், சளி உள்ளிட்ட அறிகுறிகளுடன் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதன் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பல மருத்துவமனைகளில் ராஜிவ் காந்தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனைகளிலும் வெளிப்புற சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 

குழந்தைகளின் சுவாசம் மூலமாக ஒருவரிடம் இருந்து மற்றொருவரிடம் பரவுகிறது. குறிப்பாக பள்ளிகளில் அதிகளவு பரவுகிறது. பாதிக்கப்பட்ட குழந்தைகள் வீட்டில் இருந்தபடியே முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளியை கடைபிடிப்பது, கைகளை அடிக்கடி சுத்தம் செய்வதன் மூலம் இந்த வைரஸ் காய்ச்சலை தடுக்க முடியும். ஆகவே 1 முதல் 8-ம் வகுப்பு வரை குறைந்த 7 நாட்களுக்கு விடுமுறை அளிக்கலாம். இதன் மூலம் புதுச்சேரியில் இந்த நோய் பரவலை கட்டுப்படுத்த இயலும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.