×

உண்மை கண்டறியும் சோதனைக்கு ஒருவர் மறுப்பு -ராமஜெயம் கொலைவழக்கில் பரபரப்பு

 

உண்மை கண்டறியும் சோதனைக்கு 8 பேர் ஒப்புதல் அளித்திருந்த நிலையில் திடீரென்று ஒருவர் சோதனைக்கு ஒப்புதல்  அளிக்க மறுத்திருக்கிறார்.  இதனால் ராமஜெயம் கொலை வழக்கில் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது .  

அமைச்சர் கே. என். நேருவின் தம்பியும் தொழிலதிபருமானவர் ராமஜெயம்.  இவர் திருச்சியில் நடைபயிற்சியின் போது காணாமல் போனார்.  கடந்த 2012 ஆம் ஆண்டில் மார்ச் 29ஆம் தேதி அவர் கொலை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்டார்.   இது குறித்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அதை அடுத்து இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டபோது அதிலும்  எந்தவித முன்னேற்றமும் இல்லை என்பதால்,  இந்த வழக்கு  சிபிஐக்கு மாற்றப்பட்டது.  சிபிஐ விசாரணையிலும் எந்த முன்னேற்றமும் இல்லை என்று ராமஜெயத்தின் உறவினர்கள் உயர்நீதிமன்ற மதுரை கலையில் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் இந்த வழக்கு விசாரணைக்கு சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது.

 இந்த திறனாய்வு குழு விசாரணையில் 13 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் அனுமதி கோரிக்கை வைக்கப்பட்டது.
திருச்சி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன்பு நடந்த விசாரணையில் ராஜ்குமார், சத்யராஜ், சாமி ரவி, லட்சுமி நாராயணன், மாரிமுத்து, குணசேகரன், கலைவாணன் ,சுரேந்தர் ஆகிய எட்டு பேர் உண்மை கண்டறியும் சோதனைக்கு தயார் என்று ஒப்புக் கொண்டிருக்கிறார்கள்.  சண்முகம் என்பவர் மட்டும் சம்மதம் தெரிவிக்காமல் உள்ளார்.

 இந்த விசாரணையில் ஆஜராகாத செந்தில், தினேஷ், கணேசன், ராம் ஆகிய நான்கு பேரையும் பெரும் நவம்பர் 17ஆம் தேதி விசாரணையின் போது நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

விசாரணையின் அடிப்படையில் 13 பேர் மீது சந்தேகம் ஏற்பட்டதால் அவர்களை உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்த போலீசார் முடிவு செய்தனர். இதை அடுத்து 13 பேருக்கு அனுப்பப்பட்ட உண்மையை கண்டறியும் சோதனைக்கான சம்மனில், ஆட்சேபனை ஏதும் இருந்தால் நீதிமன்றத்தில் தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டிருந்தது. 

 இதை ஏற்றுக்கொண்டு கடந்த ஏழாம் தேதி தங்களின் வழக்கறிஞர்களுடன் அந்த பட்டியலில் உள்ளவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகினர். சிலர் வழக்கறிஞர்களை மட்டும் மட்டும் அனுப்பி இருந்தனர்.   இதை அடுத்து இந்த வழக்கு இன்றைக்கு தள்ளி வைக்கப்பட்டது.   இன்று விசாரணைக்கு வந்தது .  இன்றைய விசாரணையிலும் நாலு பேர் ஆஜராகாததால்,  மேலும் ஒன்பது பேரில் 8 பேர் மட்டுமே சம்மதம் தெரிவித்ததால் இந்த வழக்கு விசாரணை மீண்டும் தள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது.