×

எருதுவிடும் விழாவில் மாடு முட்டி ஒருவர் பலி

 

வாணியம்பாடி அருகே கொத்தகோட்டை கிராமத்தில் நடைபெற்றா எருதுவிடும் விழாவில் மாடு முட்டி படுகாயம் அடைந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 


திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே கொத்தகோட்டை கிராமத்தில் மயில் திருவிழாவை முன்னிட்டு 68 ஆம் ஆண்டு எருது விடும்  விழா நடைபெற்றது. விழாவுக்கு ஊராட்சி மன்ற தலைவர் ஜே.மேனகா ஜெகதீசன் தலைமை வகித்தனர். விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் ஜி.செந்தில்குமார், ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் க.தேவராஜி ஆகியோர் கலந்து கொண்டு விழாவை கொடியசைத்து துவக்கி வைத்தனர். முன்னதாக வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் பிரேமலதா தலைமையில் உறுதிமொழி ஏற்கப்பட்டது.
விழாவில் திருப்பத்தூர், வேலூர், கிருஷ்ணகிரி, ராணிபேட்டை, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களிலிருந்தும், ஆந்திரா மாநிலத்தில் இருந்தும் சுமார் 200ககும் மேற்பட்ட காளைகள் போட்டியில் பங்கேற்று ஓடின.

நிர்ணியக்கப்பட்ட இலக்கினை அதிவேகமாக ஓடி கடந்து முதலிடம் பிடித்த வெள்ளகுட்டை கிராமத்தை சேர்ந்த காளை உரிமையாளர் முருகன் என்பவருக்கு  ரூ. 1,01,000, இரண்டாம் பரிசாக எக்காஸ்புரம் கிராமத்தை சேர்ந்த  காளையின் உரிமையாளர்  உதயம் என்பவருக்கு  ரூ.71,000, மூன்றாம் பரிசாக ரூ.51,000 என மொத்தம் 40 பரிசுகள் வழங்கப்பட்டது. விழா நடைபெற்ற இடத்தில் வாணியம்பாடி காவல் துணை கண்காணிப்பாளர் சுரேஷ் பாண்டியன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசாரும், வருவாய் கோட்டாட்சியர் பிரேமலதா தலைமையில் வருவாய் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர்.

விழாவின்போது மாடுமுட்டியதில்  படுகாயமடைந்த அதே பகுதியை சேர்ந்த சாமிநாதன் (62) என்பவர்  கிருஷ்ணகிரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து வாணியம்பாடி கிராமிய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.