×

ஐஎஃப்எஸ் நிறுவனத்தில் நடந்த சோதனையில் ஒரு கோடி ரூபாய் பறிமுதல்

 

சென்னை பொருளாதார குற்றப்பிரிவு   இன்டர்நேஷனல் ஃபைனான்சியல் சர்வீசஸ், சென்னை, அதன் இயக்குநர்கள் லட்சுமி நாராயணன் வேதநாராயணன் ஜனார்த்தனன் மோகன் பாபு மற்றும் சிலர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது. வழக்கு பதிவு செய்து இந்த நிறுவனம் தொடர்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, ஈரோடு, கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் 21 இடங்களில் இன்று சோதனை நடத்தப்பட்டது.

விசாரணையில் இன்டர்நேஷனல் ஃபைனான்சியல் சர்வீசஸ், நிறுவனம் டெபாசிட்டுகளுக்கான மாதாந்திர வட்டியில் 6% முதல் 10% வரை திரும்பப் பெறுவதாக பொய்யான வாக்குறுதியுடன் பொதுமக்களிடம் இருந்து வைப்புத் தொகையாகப் பணத்தை வசூலித்துள்ளது. ஆனால், நிறுவனம் அதன் முதலீட்டாளர்களுக்கு மாதாந்திர வட்டி மற்றும் அசல் தொகையை செலுத்தாததால் பல்வேறு புகார்கள் கொடுக்கப்பட்டது மேலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது. இதனை அடுத்து இன்று நடந்த சோதனையில் 220 ஆவணங்கள், ஹார்ட் டிஸ்க் 13 கணினிகள், 5 மடிக்கணினிகள், 1 டேப், 14 மொபைல் போன்கள், 40 சவரன் தங்கம், இதுவரை ஒரு கார் மற்றும் ரூ.1.05 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மேலும் பாதிக்கப்பட்ட மனுதாரர்கள் மேலும் தகவல் மற்றும் புகார்களை தெரிவிக்க புலனாய்வு அதிகாரி eowinsifscase@gmail.com என்ற ஈமெயில் முகவரியை தொடர்பு கொள்ளலாம். ரிசர்வ் வங்கியின் இணையதளத்தில் புதுப்பிக்கப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட நிதி நிறுவனங்களில் மட்டுமே பொதுமக்கள் தங்கள் பணத்தை சேமிக்க/டெபாசிட் செய்ய அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.