×

தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் மனு!

 

அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற பெயரில் ஓ பன்னீர்செல்வம் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி உள்ள மனுவில், சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு இடைக்கால உத்தரவு தான் என்று தெரிவித்துள்ளார்.அந்த உத்தரவில் நோட்டீஸ் தொடர்பாகத்தான் விவாதிக்கப்பட்டதே தவிர தீர்மானங்கள் குறித்து விவாதிக்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிச்சாமி தலைமையில், அதிமுக விதிகளை மீறி பொதுக்குழு கூட்டம் கூட்டப்பட்டதாகவும் அதில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் செல்லாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தில் பிரதான வழக்கு இன்னும் நிலுவையில் இருப்பதாகவும் ஓபிஎஸ் சுட்டிக் காட்டி இருக்கிறார். இது தொடர்பாக அறிக்கை தேவைப்பட்டால் சமர்ப்பிக்க தயாராக இருப்பதாகவும் மேலும் உச்ச நீதிமன்றத்தை அணுக உள்ளதாகவும் அவர் தனது மனுவில் தெரிவித்துள்ளார். எனவே சட்ட விரோதமாக நடைபெற்ற அதிமுகவினுடைய பொதுக்குழு முடிவுகளை அங்கீகரிக்க கூடாது, ஒப்புதல் தரக்கூடாது என்றும் தேர்தல் ஆணையத்திற்கு ஓபிஎஸ் கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.