×

#JUSTIN ராஜ்ய சபா எம்.பி. தேர்தல் : இன்று முதல் வேட்புமனு தாக்கல்!!

 

தமிழ்நாட்டில் 6 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தலுக்கு இன்று முதல் வேட்புமனு தாக்கல் செய்யலாம் 


திமுகவின் டி.கே.எஸ் இளங்கோவன், ஆர்.எஸ். பாரதி,  கே.ஆர்.எஸ் ராஜேஷ்குமார், அதிமுகவை சேர்ந்த நவநீதகிருஷ்ணன், பாலசுப்ரமணியன், விஜயகுமார் ஆகியோரது மாநிலங்களவை உறுப்பினர்   பதவிக்காலம் ஜூன் 29ம் தேதியுடன் நிறைவடைகிறது.  அத்துடன் குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மாநிலங்களவை உறுப்பினர்களில் வாக்கு தேவை என்பதால்  57 இடங்களுக்கான மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் வரும்  ஜூன் 10ஆம் தேதி   நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவித்திருந்தது. தமிழகத்தை பொறுத்தவரை தேர்தல் நடத்தும் அலுவலராக சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலராக ரமேஷ் , தேர்தல் பார்வையாளராக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு  ஆகியோர்  நியமிக்கப்பட்டுள்ளனர்.  

இந்நிலையில் தமிழ்நாட்டில் 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட இன்று முதல் மே 31-ஆம் தேதி வரை தலைமைச் செயலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரி இடம் வேட்புமனு தாக்கல் செய்யலாம். மாநிலங்களவை தேர்தல் சட்டப்பேரவை உறுப்பினர்களின் வாக்குகள் அடிப்படையில் நடைபெறும் . ஒரு மாநிலங்களவை உறுப்பினரும் , 34 சட்டப்பேரவை உறுப்பினர்கள் வாக்களிக்க வேண்டும்.  சட்டப்பேரவை உறுப்பினர்கள் பலத்தின் அடிப்படையில் திமுகவுக்கு 4 , எதிர்க்கட்சியான அதிமுகவுக்கு 2 இடங்கள்  கிடைக்கும்.

 திமுக தனது கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு  ஒரு இடத்தை வழங்கியுள்ள நிலையில் மீதமுள்ள மூன்று இடங்களில் தஞ்சை கல்யாணசுந்தரம் ,கிரிராஜன், கே.ஆர்.எஸ் ராஜேஷ்குமார் ஆகியோர் போட்டியிடுகின்றனர் என்பது  கவனிக்கத்தக்கது.