மாதம் ரூ. 47,000 சம்பளத்தில் SBI-ல் வேலை.. மொத்தம் 5 ஆயிரம் காலிப்பணியிடங்கள்..
ஸ்டேட் பேங்கில் காலியாக உள்ள வாடிக்கையாளர் ஆதரவு மற்றும் விற்பனை பிரிவு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணிக்கு விருப்பமும் தகுதியும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் - ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா
பணி - ஜூனியர் அசோசியேட் ( வாடிக்கையாளர் ஆதரவு மற்றும் விற்பனை பிரிவு )
மொத்த காலிப்பணியிடங்கள் - 5,008
கல்வித்தகுதி - ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளாநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் .
வயது வரம்பு - 20 வயது முதல் 28 வயதுக்குள் இருக்க வேண்டும்..
விண்ணப்பிக்க கடைசி நாள் - 27 செப்டம்பர் 2022
மாத சம்பளம் - ரூ . 17,900 - ரூ. 47,920/-
தேர்வு செய்யப்படும் முறை - முதல்நிலை தேர்வு ( Preliminary Exam), முதன்மைத் தேர்வு ( Mains Exam) , சான்றிதழ் சரிபார்ப்பு (certificate Verification)
முதல்நிலை தேர்வு நடைபெறும் நாள் - நவம்பர் 2022
முதன்மைத் தேர்வு நடைபெறும் நாள் - டிசம்பர் 2022
தேர்வு நடைபெறும் இடங்கள் : சென்னை, சேலம், கோவை, ஈரோடு, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாகர்கோவில், ராமநாதபுரம், தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி, வேலூர், விருதுநகர்.
தேர்வு மொழி : தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் வினாத்தாள் இருக்கும்.
விண்ணப்பக் கட்டணம் - ரூ. 750/- எஸ்.சி., எஸ்.டி., மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினருக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை..
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் www.bank.sbi/careers என்கிற முகவரியில் பதிவு செய்து, பின்னர் www.sbi.co.in என்கிற இணையதள பக்கத்திற்குச் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.