×

நில அபகரிப்பு குற்றச்சாட்டுக்கு அமைச்சர் செஞ்சி மஸ்தான் மறுப்பு

 

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் தமிழக சிறுபான்மையினர் நல அமைச்சர்  செஞ்சி மஸ்தான் தனியார் தொலைக்காட்சியில் தன் மீது வக்பு வாரிய சொத்துக்களை அபகரித்ததாக எழுந்த செய்திக்கு மறுப்பு தெரிவிக்கும் விதமாக  செய்தியாளர்களை சந்தித்தார்.

மனைவியின் பெயரில்  நிலம் அபகரித்ததாக எழுந்த குற்றச்சாட்டிற்கு  தன் மனைவி மீது எந்த சொத்தும் இல்லை என அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார். இஸ்லாம்  அறக்கட்டளைக்கு சொந்தமான சைதானி பீ என்ற அறல்கட்டளையின் பெயரில்  உள்ள  சொத்துக்களை  திரித்து என் மனைவி மீது சொத்து உள்ளதாக தவறான குற்றச்சாட்டை வெளியிட்டுள்ளதாகவும் அவர் கூறினார். 

தொடர்ந்து பேசிய அவர், மேலும் தன்மீது எந்த  சொத்தும் இல்லை. தொடர்ந்து வக்பு வாரிய சொத்துக்களை பாதுகாத்து வருவதில்  அதிக  கவனம் செலுத்தி வருகின்றேனே. தவிர வக்பு வாரிய சொத்துகளை ஒருபோதும் அபகரித்த நான் நினைத்ததில்லை. இது முற்றிலும் தவறான குற்றச்சாட்டு எனக் கூறிய அமைச்சர் செஞ்சி மஸ்தான்,  எங்கள் குடும்பத்தில் 1972 எனது தந்தை வாங்கிய நிலத்தை இதுதான் என் குடும்பத்தை சார்ந்தவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். 

என்னுடைய சொத்து மதிப்பு சட்டமன்றத் தேர்தலில் நான் குறிப்பிட்டிருந்த சொத்து மதிப்பீடு தவிர வேறு சொத்து எனக்கு கிடையாது. இச்செய்தி அவதூறாக என் மீது காழ்ப்புணர்ச்சி காரணமாக உண்மைக்கு மாறாக எனக்கு எதிராக முன்னாள் வக்பு வாரிய தலைவர் புகார் அளித்துள்ளார். இது முழுக்க தவறான குற்றசாட்டு தொடர்ந்து இதுபோன்ற குற்றச் சாட்டில் ஈடுபட்டால் சட்டரீதியாக சந்திக்க தயார் எனவும் அமைச்சர் கூறினார்.  மடியில் கனமில்லை வழியில் எனக்கு பயம் இல்லை என கூறிய செஞ்சிமஸ்தான், அடிமட்டத் தொண்டனாக வளர்ந்து பல்வேறு பொறுப்புகளை வகித்து வரும் என் மீது பொய்  செய்தியை வெளியிட்டு இருப்பது மிக வேதனைக்குரியது, தொடர்ந்து இதே நிலை நீடித்தால் வழக்கு தொடர்ந்து அவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கைமேற்கொள்ள தயார் எனக் கூறினார்.