×

அமைச்சராக இருந்த ஜெயக்குமார் வடசென்னைக்கு எந்த வளர்ச்சி பணிகளை கொண்டு வந்தார்? சேகர்பாபு

 

அதிமுக ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்த ஜெயக்குமார் வடசென்னைக்கு எந்த வளர்ச்சி பணிகளை கொண்டு வந்தார் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை திரு.வி.க. நகர் தொகுதிக்குட்பட்ட பட்டாளம் பகுதியில் மழைநீரால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டு, பொதுமக்களுக்கு அமைச்சர் சேகர்பாபு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அவருடன் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, திரு.வி.க.நகர் சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி உள்ளிட்டோர் உடனிருந்தனர். 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார், “கடந்த ஆண்டு பருவமழை போது 20செ.மீ அளவுக்கு திரு.வி.க நகர் பகுதியில் மழை பெய்தது. இந்த முறை இப்பகுதியில் 4 நாட்களில் 40 செ.மீ மழை பெய்துள்ளது. ஆனால் தண்ணீர் மூழுவதுமாக வடிந்து விட்டது. தண்ணீர் நிற்கும் ஒருசில பகுதிகளை கண்டறிந்து அடுத்த பருவமழைக்குள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். சென்னை முழுவதும் பல முக்கிய இடங்களை உதாரணமாக சொல்ல முடியும். மழைநீர் வடிகால் பணிகள் முறையாக நடந்ததால் தண்ணீர் தேங்கவில்லை. வரும் காலத்தில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்காத வண்ணம் இருக்க கூடுதலாக நிதி ஒதுக்க முதல்வர் கூறியுள்ளார்.  இந்த ஆண்டு 75 கோடி ரூபாய் செலவில் மழைநீர் வடிகால், கால்வாய்கள் தூர்வாரப்பட்டுள்ளது. 

மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளில் (phase 1) 95% பணிகள் நிறைவடைந்துள்ளன. அடுத்த கட்ட பணிகள் விரைந்து முடிக்கப்படும். இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக தனது பணியை செய்து வருகிறேன். அதிமுக உட்கட்சியில் இருக்கும் பிரச்சினைகளுக்கே தீர்வு காணப்பட முடியவில்லை, அதனால் அரசை குற்றம் கூறுவதற்கு அறுகதை இல்லை.  கடந்த முறை அமைச்சராக இருந்த போது அவரது சொந்த தொகுதிக்கு அருகில் இருக்கும் ஆர்.கே.நகர் பகுதிக்கு எந்த வளர்ச்சியை அமைச்சர் ஜெயக்குமார் கொண்டு வந்தார்?” என கேள்வி எழுப்பினார்.