×

நியாயவிலை கடைகளில் சிறு தானியங்கள்- அமைச்சர் சக்கரபாணி

 

கோவை நிர்மலா கல்லூரியில் தமிழ்நாடு சிறுதானிய கண்காட்சி மற்றும் மாநாடு நடைபெற்று வருகிறது.டேன் மில்லெட் அமைப்பு சார்பில் நடைபெறும் இந்த கண்காட்சியில் 555 வகை மதிப்புக் கூட்டப்பட்ட சிறுதானிய உணவுப் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டது. அதிக அளவிலான சிறுதானிய மதிப்புக் கூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் இடம் பெற்றதன் அடிப்படையில் உலக சாதனையில் இடம்பெற்றது. 

அமெரிக்காவின் உலக சாதனை அமைப்பின்  அதிகாரப்பூர்வ பதிவு மேலாளர் கிரிஸ்டோபர் டெய்லர் உலக சாதனை சான்றிதழை வழங்கினார். இதில் தமிழக உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி சான்றிதழை பெற்றுக் கொண்டார். தொடர்ந்து மாநாட்டில் பேசிய தமிழக உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி, “மால்களிலும், வெளி கடைகளிலும், பேக்கரி,  உணவுப் பொருட்களைதான் மாணவர்கள் வாங்கி சாப்பிடுகிறீர்கள். முதல்வர் சிறுதானிய விவசாயிகளை ஊக்கபடுத்த வேண்டும் என்பதற்காக தர்மபுரி, நீலகிரி மாவட்டங்களில் அரிசிக்கு பதிலாக இரண்டு கிலோ கேழ்வரகு இந்த ஆண்டு வழங்க உள்ளார். மேலும் வரும் ஆண்டுகளில் அரசியை படிப்படியாக குறைத்து சிறுதானியங்களை வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

நோய்களை கட்டுப்படுத்த சிறுதானியங்களை பயன்படுத்த வேண்டும். தமிழ்நாட்டில் அனைவருக்கும் சத்தான உணவு வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில்   முதல்வர்  எடுத்துச்செல்ல உள்ளார். தற்போது விவசாயிகள் வருமானத்தை அதிகம் தரும் பயிர்களை நோக்கி சென்றுவிட்ட நிலையில் சிறுதானிய வளர்ச்சிக்கு தமிழ்நாடு அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மேலும்
மாணவர்கள் பேக்கரி,கடைகள், மால்களுக்கு,கே.எப்சிக்கு போய் உணவுகள் உண்பதை தவிர்த்து சிறுதானியங்களை பயன்படுத்த கற்றுக்கொள்ள வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.