×

அண்ணா பல்கலைக்கழகத்தில் நேரடி கலந்தாய்வு நடத்த அரசு பரிசீலினை - அமைச்சர் பொன்முடி

 

அண்ணா பல்கலைக்கழகத்தில் வரும் ஆண்டில் நேரடி கலந்தாய்வு நடத்த அரசு பரிசீலித்து வருவதாக உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். 

தமிழக சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்தின்போது விளக்கம் அளித்து பேசிய உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் முறையில் கலந்தாய்வு நடைபெற்று வரும் நிலையில், அதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருவதாக கூறினார். அதனை தவிர்க்கும் பொருட்டு வரும் கல்வியாண்டில் 10 இடங்களில் "நேர்முக கலந்தாய்வு" நடத்த அரசு பரிசீலனை செய்து வருவதாக கூறியுள்ளார்.  மேலும் கலை அறிவியல் கல்லூரிகளுக்கு மொத்தமாக கவுன்சிலிங் நடத்தும் திட்டம் ஏதும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.  கலை அறிவியல் கல்லூக்காக 20 கிலோ மீட்டருக்கு மேல் சென்று பயிலும் நிலை உள்ள பகுதியில் புதிய கல்லூரி அமைக்கபடும் எனவும் தெரிவித்தார். 

கேள்வி நேரத்தின் போது கோவை மாவட்டம் சிங்காநல்லுார் தொகுதி எம்.எல்.ஏ., கே.ஆர். ஜெயராம் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் பொன்முடி,
சிங்காநல்லூர் தொகுதியில் புதிய அரசு கலை அறிவியல்  கல்லூரிக்கு தேவை இப்போது இல்லை என்றும், கோவையில் மட்டும் கலைகல்லூரிகளில் 59,500 இடங்கள் மொத்தமாக உள்ளது , இவற்றில் 35,400 இடங்கள் தான் பூர்த்தியாகியுள்ளது. எனவே இப்போது புதிய கல்லூரி அமைக்க தேவை இல்லை. 
அரசு கலை கல்லூரிகள் இல்லாத தொகுதிகள் முன்னுரிமை அளித்து புதிய கல்லூரிகள் அமைக்கப்படும் என்றார்மேலும், கோவை மாவட்டத்தில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 923 இடங்கள் காலியாக உள்ளது எனவும், கலை அறிவியல் கல்லூரிக்காக 20 கிலோ மீட்டருக்கு மேல் சென்று பயிலும் நிலை உள்ள பகுதியில் புதிய கல்லூரி அமைக்கபடும் எனவும் கூறினார்.