×

“அண்ணாமலை ஒரு அரசியல்வாதி இல்லை; சீசன் அரசியல்வாதி”

 

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகேவுள்ள சின்னாறு உப வடிநில பகுதியில் உள்ள சின்னாறு அணை கால்வாய், கேசர்குழிஅல்லா அணை கால்வாய்கள், குமாரசெட்டி ஏரி மற்றும் பதினைந்து அணைக்கட்டுகளை புனரமைக்கும் பணியினை வேளாண்மை மற்றும் உழவர்நலத்துறை அமைச்சர் எம். ஆர். கே பன்னீர்செல்வம் துவக்கி வைத்தார்.

இதனை தொடர்ந்து பஞ்சப்பள்ளியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “மைக் கிடைக்கிறேதே என்று பேசுபவர்... அண்ணாமலை. அவர் ஒரு அரசியல் வாதியே இல்லை.. சீசன் அரசியல்வாதி.. கர்நாடகாவில் காவல்துறையில் பணியாற்றியபோது, தமிழகத்திற்கு காவிரி நீர விடக்கூடாது என பேசியவர். அண்ணாமலை தலைவருக்கே தகுதியில்லாதவர். தகுதியில்லாதவர்களை தலைவராக்கியிருக்கிறார்கள். பாஜகவிற்கு கொள்கையும் கிடையாது, ஒன்றும் கிடையாது, பேசி, பேசியே கட்சியை வளர்த்து வருகின்றனரே தவிர வேறு ஒன்றும் கிடையாது. 

அண்ணாமலை அனைத்து தொழிலதிபர்களையும் மிரட்டி வருகிறார், அவர் பாணியே மிரட்டல் பாணி, யார் யாரெல்லாம் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று மக்களுக்கு தெரியும்.மத்திய அரசின் அதிகாரத்தை பயன்படுத்தி அரசு அதிகாரிகளையும், மற்றவர்களையும் மிரட்டி வருகிறார்கள், அது தமிழகத்தில் எடுபடாது. தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்கள் புளோரைடு இல்லாத தூய்மையான குடிநீர் பருகிட கலைஞர் ஆட்சி காலத்தில்  கொண்டு வரப்பட்ட திட்டம் தான் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம். இரண்டாவது கட்ட  திட்ட பணிகளுக்கான ஆய்வுகள் நடந்து வருகின்றது, முடிந்த பின்னர் முதலமைச்சர் அவர்கள் திட்டத்தினை தொடங்கி வைப்பார்கள். திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளில் எழுபது சதவீத வாக்குறுதிகளை, திட்டங்களை படிப்படியாக நிறைவேற்றி வருகின்றோம்” எனக் கூறினார்.