×

தொடர்ந்து மீன் சாப்பிடுவதால் இதுவரை கண்ணாடி அணியவில்லை- மா.சு.

 

25 வருடங்களாக ஒரு நீரிழிவு நோயாளியாக இருந்தும் தொடர்ந்து மீன் சாப்பிடுவதால் இதுவரை கண்ணாடி அணியவில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

உலக மீனவர் தினத்தையொட்டி சென்னை கொட்டிவாக்கம் மீனவ குப்பம் கடற்கரையில், திமுக சார்பில் மீனவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட மீனவர் அணி துணை அமைப்பாளர் எம்.பார்த்திபன் தலைமையில் நடைபெற்றது.  இதில் சிறப்பு விருந்தினர்களாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்த்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.அரவிந்த்ரமேஷ் துணை மேயர் மகேஷ்குமார் ஆகியோர் கலந்துகொண்டு, மீனவர்களுக்கு நலத்திட்டங்களை வழங்கினர்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “உலகளவில் 25 சதவீத புரோட்டின் மீன்களில் இருந்து கிடைக்கிறது. நானும் ஒரு மீனவன் என்பதில் பெருமையடைகிறேன். ஜாதியை பற்றி பேசுவதில் தமக்கு உடன்பாடில்லை. கடலில் அல்ல, ஏரி, குட்டைகளில் மீன் பிடிக்கும் குடும்பத்தில் பிறந்த தன்னை, அம்மா இறந்தவுடன் பிழைப்பிற்காக தந்தை சென்னைக்கு அனுப்பினார்.

சென்னையில் திமுகவில் சேர்ந்த தம்மை கலைஞர் தான் வாழவைத்தார். மீனவனாக பிறந்த நான், மேயராக வளர்ந்து, தற்போது மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக இருக்கிறேன், இது பின்தங்கிய சமுதாயத்திற்கு திமுக தந்த வாய்ப்பு. 25 வருடங்களாக ஒரு நீரிழிவு நோயாளியாக இருந தும் தொடர்ந்து மீன் சாப்பிடுவதால் இதுவரை கண்ணாடி அணியவில்லை. 

ஊரூர் முதல் உத்தண்டி வரை 13 மீனவ குப்பங்கள் இருக்கின்றன. தமிழக மீனவ குப்பங்களை ஒருங்கிணைத்து கலைஞர் நினைவு படகு போட்டி நடத்த திட்டமிடப்பட்டுள்ளோம்.  மிக சிறப்பாக நடக்கவிருக்கும் இந்த போட்டியில் வெல்வோருக்கு, முதலமைச்சர் பரிசுகளை வழங்குவார். மீனவர்களுக்கு முதன் முதலில் கூட்டுறவு சங்கம் அமைத்து கொடுத்தது திமுக. ஆனால், யார் யாரோ தற்போது நாங்கள் தான் மீனவ நண்பன் என்று சொல்லிக் கொள்கின்றனர். மீனவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களுளை கொண்டு வந்தது திமுக. மீன்பிடி தடைகாலம், மீனவர்கள் காணாமல் போனால் நிதியுதவி, மீனவர்கள் நலவாரியம், அர்களுக்கு கான்கிரிட் வீடுகள், சுனாமியின் போது பேரிடர் கால நிதி, கூட்டுறவு சங்கம் கடன் 96 ஆயிரம் கோடி ரத்து உள்ளிட்ட நல திட்டங்களை கலைஞர் மீனவர்களுக்காக செய்திருக்கிறார்.தற்போது மீனவ படகுகளுக்கு நான்காண்டுக்கு ஒரு முறை மானியம் என்பதை முதல்வர் இரண்டு ஆண்டாக குறைக்க திட்டமிட்டு வருகிறார்.  விவசாயிகளுக்கு பசுமை திட்டம் போல், மீனவர்களுக்கு நீல திட்டம் கொண்டு வரப்படும், நெல் போல் மீனுக்கு ஆதார விலை நிர்ணயிக்கப்படும்” எனக் கூறினார்.