×

அதிமுக அலுவலகத்துக்கு செல்கிறேன் என ஓபிஎஸ் கூறியிருந்தால் பாதுகாப்பு அளித்திருப்போம்- மா.சு

 

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே ஆராய்ச்சிபட்டியில் முதலமைச்சரின் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் பங்கேற்று ஆய்வு செய்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.


அப்போது பேசிய அவர், “சங்கரன்கோவில் அருகே உள்ள ஆராய்ச்சி பட்டியில் புற்றுநோய் இருப்பதாக சொல்லப்பட்டது. அது ஒரு திரை ரீதியாக ஆய்வு செய்து வருகிறோம். அதன் அடிப்படையில் உரிய முறையில்மருத்துவ பரிசோதனையின் மூலம் உறுதிப்படுத்தப்படும். அதிமுக தலைமைச் செயலகத்திற்கு ஓ.பி.எஸ். போவதற்கு முன் பாதுகாப்பு கேட்டிருந்தால் தமிழக அரசு உரிய  பாதுகாப்பு கொடுத்திருக்கும். அவர்கள் சொல்லவில்லை. வானரகத்துக்கு போறதுக்கு முன்னாடி அவ்வை சண்முகம் சாலைக்கு போவதாக அவர்கள் சொல்லியிருந்தால் நாங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருப்போம்.

பொதுக்குழு கூட்டத்தினால் கொரோனா தொற்று பரவும் நிலை ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக அவர்களிடம் பலமுறை கூறியுள்ளோம். தனிமனித இடைவெளி, முவகாசம் அணிந்து வர வேண்டும் என கூறியிருந்தோம் அதை அவர்கள் செய்வதாக கூறினார்கள் ஆனால் இன்று நடந்த கூட்டத்தில் எந்த அளவு விதிமுறைகளை கடைபிடித்தார்கள். என்பது தொலைக்காட்சிகளில் வந்தது தான் வெளிச்சம். பூஸ்டர் தடுப்பூசியானது 18 வயது முதல் 59 வயது வரையிலான அனைவரும் போட்டுக்கொள்ளலாம்.  இந்த தடுப்பூசி தனியார் மருத்துவமனையில் தான் போட வேண்டும். அதற்கு குறைந்த அளவு கட்டணத்தை ஒன்றிய அரசு நிர்ணயம் செய்துள்ளது. பூஸ்டர் தடுப்பூசி போடுவதற்கு 386 ரூபாய் 25 பைசா நிர்ணயம் செய்துள்ளனர். அதனை பொதுமக்கள் பணம் கொடுத்து போடுவதற்கு கொஞ்சம் தயக்கம் காட்டி வருகின்றனர்” எனக்கூறினார்.