×

அமைச்சரான பின் பெண் குழந்தைகள் இல்லை என்ற கவலை தீர்ந்தது - அன்பில் மகேஷ்

 

கல்வி மற்றும் சுகாதாரத் துறையை இரு கண்களாக பாவித்து முதல்வர் செயல்படுவதாக புளியங்குடியில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியுள்ளர்.

தென்காசி மாவட்டம் புளியங்குடி டி.என் புதுக்குடியில் அமைந்துள்ள இந்து நாடார் உறவின்முறை மேல்நிலைப் பள்ளியில் இந்து நாடார் உறவின்முறை கமிட்டி துவக்க விழா, காமராஜர் பிறந்த நாள் விழா, பள்ளியின் ஐம்பதாவது ஆண்டு விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது.  விழாவில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு பள்ளியின் புதிய அலுவலக கட்டிடத்தை திறந்து வைத்தார்.  அதனைத் தொடர்ந்து பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து பேசிய தமிழக பள்ளி கல்வித்துறை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “எனக்கு இரண்டு மகன்கள் மட்டும் தான் எனக்கு பெண் குழந்தை இல்லை என்ற இந்த ஏக்கம் பள்ளிகல்வித் துறையின் அமைச்சரான பின் நீங்கியது. தற்போது தமிழ்நாட்டில் உள்ள அனைத்து குழந்தைகளும் என் மகளை போல் தான் நினைக்கிறேன். கல்வி மற்றும் சுகாதார துறையை இரு கண்களாக பாவித்து வருபவர் தமிழ்நாடு முதலமைச்சர்.கல்வி துறைக்காக மட்டும் ரூ.36,895 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தவர் முதல்வர் ஸ்டாலின்” என்று பேசினார்.

நிகழ்ச்சியில் தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் தனுஷ் குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் பழனி நாடார், ராஜா, சதன் திருமலைக்குமார், திமுக தெற்கு மாவட்ட செயலாளர் சிவ பத்மநாதன், வடக்கு மாவட்ட செயலாளர் செல்லத்துரை உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், சமுதாய தலைவர்கள், பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.