×

பொதுத்தேர்வில் ஆப்சண்ட் ஆன மாணவர்களுக்கு சிறப்பு தேர்வு - அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்

 

10,11,12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத வராத மாணவர்களை தேர்வு எழுத வைப்பதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

சென்னை:- ராயப்பேட்டை புதுக் கல்லூரியில் மாநில அளவில் நடைபெறும் சிலம்பம் போட்டியை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.  பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறியதாவது: விளையாட்டு துறையில் சிலம்பம் போட்டி 3% இடஒதுக்கீட்டை முதலமைச்சர் வழங்கியுள்ளார். பாரம்பரிய விளையாட்டான சிலம்பத்தை ஊக்கப்படுத்துவதற்கான முயற்சியை முதலமைச்சர் மேற்கொண்டுள்ளார் என்றும் சிலம்பத்தின் வரலாற்றை அறிய தனி குழு அமைத்துள்ளார். மேலும் 4 இடங்களில் ஒலிம்பிக் கமிட்டி, சென்னைக்கு அருகில் விளையாட்டு நகரம், செஸ் ஒலிம்பியாட் போட்டி என பல  விளையாட்டை மேம்படுத்த திட்டங்களை முதலமைச்சர் கொண்டு வந்துள்ளார். அரசு பள்ளிகளில் 5 வயது கடந்த மாணவர்களின் சேர்க்கை வழக்கம் போல் நடைபெற்று வருகிறது. மாணவர் சேர்க்கை குறித்து ஆலோசனை மேற்கொண்டோம் விரைவில் சுற்றறிக்கை வெளியாகும். 

பள்ளிகள் திறக்கும்போது மாணவர்கள் முக கவசம் அணிவது குறித்து முதலமைச்சர் அலுவலகத்தில் வரும் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுவோம்.  6.70 லட்சம் மாணவர்கள் தேர்வுக்கு வருகை தராத காரணம் குறித்து ஆராய்ந்து காரணத்தை கண்டுபிடிப்போம். மாணவர்கள் சிறப்பு தேர்வுகள் எழுதவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என கூறினார்.