×

திராவிட மாடல் என்பது அரசியல் கிடையாது- அமைச்சர் பொன்முடி

 

இந்தி உலக மொழி அல்ல இந்தியாவில் சில மாநிலங்களில் பேசி வரும் மொழி எனவே இந்தியில் படிக்க வேண்டிய அவசியம் இல்லை என உயர்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

வேலூர் முத்துரங்கம் அரசினர் கலை அறிவியல் கல்லூரியில் கல்லூரி மாணவ மாணவியர் இடையே நான் முதல்வன் திட்டம் குறித்து கலந்துரையாடிய  பொன்முடி, “இந்தியா என்பது ஒரு மொழிக்கு சொந்தமான நாடு அல்ல. திராவிட மடல் என்பது அரசியல் கிடையாது. சமூக நீதி, சமத்துவ உணர்வு, எல்லோரும் சமமாக இருக்க வேண்டும், அடித்தட்டு மக்களுக்கு அனைத்து உரிமைகளும் கிடைக்க வேண்டும் பெண்களுக்கு சம உரிமை கிடைக்க வேண்டும் என்பதே திராவிட மடல். தமிழ்நாட்டிற்கு என ஒரு கல்விக் கொள்கை வகுக்கப்பட்டு வருகிறது. பேரறிஞர் அண்ணா காலத்தில் தான் இரு மொழி கொள்கை  கொண்டுவரப்பட்டது.

இந்தி மொழி மேல் எங்களுக்கு கோபமோ? வெறுப்போ? இல்லை. பள்ளிகளிலோ அல்லது கல்லூரிகளிலோ ஆங்கில ம் மற்றும் தமிழ் மொழியே படித்தால் போதும். பன்னாட்டு மாணவர்களுடன் கலந்து உரையாடும் பொழுது ஆங்கிலம் தேவை உள்ளூரிலே பேசும்பொழுது தமிழ் மொழி அவசியம். அண்ணா இயற்றிய சட்டத்தின் அடிப்படையிலே இன்று இரு மொழிக் கொள்கை இன்று அனைத்து கல்லூரிகளிலும் நடைமுறையில் இருக்கிறது. கல்லூரிகளிலே தமிழ் மொழியை கொண்டு வந்தவர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர். தமிழ் மீடியத்தில் படிப்பவர்களுக்கு உதவி தொகை வழங்கியதும் கலைஞர் தான். ஆங்கிலத்தில் படித்தவர்கள் தமிழிலும் தேர்வு எழுதலாம் என்ற நடைமுறையை கொண்டு வந்தவரும் கலைஞர் தான் தேசிய கல்விக் கொள்கையில் மூன்றாம் வகுப்பு முதலில் பொது தேர்வை நடத்த வேண்டும் என சொல்கிறார்கள்.2006 ஆம் ஆண்டு முதல் திமுக ஆட்சியில் பொறியியல் கல்லூரிகளிலும் தமிழ் வழியிலேயே படிக்கலாம் என கொண்டு வந்தோம்” என்று பேசினார்.