×


சமஸ்கிருத சர்ச்சை - சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதிரடி நடவடிக்கை

 


மதுரை மருத்துவக் கல்லூரி முதலாமாண்டு மாணவர் வரவேற்பு நிகழ்ச்சியில் சமஸ்கிருதத்தில் உறுதிமொழி ஏற்றதால் சர்ச்சை ஏற்பட்டுள்ள நிலையில், கல்லூரி டீனை காத்திருப்போர் பட்டியலுக்கு இடமாற்றம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

மதுரை மருத்துவக் கல்லூரியில்  முதலாம் ஆண்டு மாணவர்கள் வரவேற்கும் நிகழ்ச்சி நேற்று  மருத்துவ கல்லூரியில் நடைபெற்றது.மதுரை மருத்துவக் கல்லூரி நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்ச்சியில்  அமைச்சர்கள் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி  மருத்துவக் கல்லூரி முதல்வர் ரத்தினவேல் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் மானவ மாணவியர் உள்ளிட்ட  பலரும் கலந்து கொண்டனர்.இந்த நிகழ்ச்சியில் முதலாம் ஆண்டு மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு வாசித்தனர்.ஆங்கிலத்தில் உறுதிமொழி ஏற்றதில் சமஸ்கிருத வாக்கியங்கள் அடங்கிய உறுதிமொழி ஏற்றதால் சர்ச்சை எழுந்தது.

இது தொடர்பாக மருத்துவ கல்வி இயக்குனரகம் மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வர் ரத்தினவேலிடம் சமஸ்கிருதத்தில் உறுதி மொழி ஏற்றது தொடர்பாக விளக்கம் கேட்ட நிலையில்,  NMC தளத்தில்  உறுதிமொழி படிவத்தை மாணவ சங்க தலைவர் பதவிறக்கம் செய்து வாசித்து விட்டதாகவும், அவர் என்னிடம் அல்லது பேராசிரியரிடம் அதை காட்டியிருந்தால் இந்த மாதிரி தவறு நடந்திருக்காது என்றும் அவர் விளக்கமளித்திருந்தார். 

இந்நிலையில், இந்த விவகாரத்தில் கல்லூரி டீன் ரத்தினவேல் காத்திருப்போர் பட்டியலுக்கு இடமாற்றம் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியின் தெரிவித்துள்ளார். மேலும், சமஸ்கிருதத்தில் உறுதிமொழி ஏற்றதாக கூறப்படும் விவகாரத்தில் துறை ரீதியாக விசாரணை நடத்த மருத்துவக்கல்வி இயக்குநருக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.