×

கன்னியாகுமரில் குரங்கு அம்மையா? - அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்

 

கன்னியாகுமரில் குரங்கு அம்மை அறிகுறி என்று வெளியான தகவல் உண்மை இல்லை என தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது ; தமிழகத்தில் 97 சதவீத பேர் முதல் பேர் முதல் தவணை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். இரண்டாம் தவணை தடுப்பூசியை பொறுத்த்த்வரை 85.80 சதவிதம் பேர் செலுத்தியுள்ளனர் .40 அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். இரண்டு வாரத்திற்கு ஒரு முறை தமிழகத்தில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படும். வரும் ஆகஸ்ட் 7-ம் தேதி மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படும். கன்னியாகுமரில் குரங்கு அம்மை அறிகுறி என்று வெளியான தகவல் உண்மை இல்லை. குரங்கு அம்மை நோய் குறித்து யூகங்களுக்கு இடம் கொடுக்கக் கூடாது. தமிழகத்தில் இதுவரை குரங்கு அம்மை பாதிப்பு இல்லை. 

தொடர்ந்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணின், வெளிநாடுகளில் மருத்துவம் பயின்ற மாணவர்களுக்கான பயிற்சி கட்டணம் 30 ஆயிரம் ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளதாகவும், உக்ரைன் மாணவர்கள் இந்தியாவிலேயே படிக்க வேண்டும் என்ற உத்தரவிற்காக  காத்துக்கொண்டு இருக்கிறோம் எனவும் கூறினார்.