×

பிஜேபி ஒரு பிசாசு- அமைச்சர் துரைமுருகன்

 

தமிழகத்தில் பிஜேபி பண பலம், அதிகார பலத்தால் வளர்ச்சியடைந்து வருகிறது. வரும் தேர்தலில் நாம் அவர்களிடம் சவாலுடன் எதிர்கொள்ள வேண்டும் என தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

காட்பாடி அடுத்த லத்தேரியில் திமுகவின் பொது உறுப்பினர்கள் கூட்டம் வேலூர் மாவட்ட அவைத்தலைவர் முகமது சகி தலைமையில் நடைபெற்றது. இதில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கதிர் ஆனந்த்,ஜெகத் ரட்சகன்,தமிழக நீர் வளத்துறை துரைமுருகன்,  சட்டமன்ற உறுப்பினர்கள்  கார்த்திகேயன்,நந்தகுமார், உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் துரைமுருகன், “ஒரு பிசாசு மாதிரி பிஜேபி உருவெடுத்து வருகிறது. பணம் அதிகாரம், பலத்தோடு அதனை நாம் முறியடிக்க வேண்டுமென்றால்  நாம் பூத் கமிட்டிகளை வலுவாக அமைக்க வேண்டும். எது எப்படி வந்தாலும் அதனை நாம் சந்திப்பதற்கு தயாராக இருக்கிறோம். நாம் 40-க்கும் 40 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். அப்போதுதான் அதிகாரிகளும் பயப்படுவார்கள். மத்திய அரசும் பயப்படும். அதற்கு பின் நம்மிடம் அவர்கள் பேசுவார்கள். இந்த முறை நாம் பெரிய பண திமிங்கலத்தை எதிர்க்க போகிறோம்.

தமிழக அரசு சரியாக நடக்க வேண்டும் என்றால், மக்கள் வாங்கிய கடனை ஒழுங்காக திருப்பி செலுத்த வேண்டும். எப்படி இருந்தாலும் தள்ளுபடி செய்வார்கள் என்ற எண்ணத்துக்கு வந்துவிடக்கூடாது. கடனை திருப்பி கட்டும் நல்ல உணர்வோடு அனைவரும் இருக்க வேண்டும். அண்ணாமலை கனிம வளக்கொள்ளை தொடர்பாக ஆதாரப் பூர்வமாக தெரிவிக்கட்டும். அதன்பின் நடவடிக்கை எடுக்கிறோம்” எனக் கூறினார்.