×

#BREAKING 16ஆம் தேதி உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுப்பெற வாய்ப்பு

 

வரும் 16ஆம் தேதி உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுப்பெறுவதற்கு சாதகமான சூழல் நிலவுகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் 16ஆம் தேதி உருவாகும், குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என இந்திய வானிலை மையம் அறிவித்து இருந்தது. இந்நிலையில், வங்கக்கடலில் காற்றின் திசை காரணமாகவும், காற்றில் நிலவும் ஈரப்பதம் காரணமாகவும் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி கரையை நோக்கி நகரும் போது வலுப்பெற்று  புயலாக மாற சாதகமான சூழல் நிலவுவதாக வெப்ப மண்டல புயல்களை கண்காணிக்கும் மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுப்பெற்றால், தமிழக கடற்கரை பகுதிகளான கடலூர், நகப்பட்டினம் இடையே கரையை கடக்ககூடும் அல்லது விசாகப்பட்டினம் - சென்னைக்கு இடையே 20 - 22 தேதிக்குள் கரையை கடக்க கூடும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவது குறித்தும், இது மேலும் வலுப்பெற்று புயலாக மாறுமா என்பது தொடர்ந்து கண்காணிக்கப்படுவதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.