×

"பொறியியல் கல்லூரிகளில் காலியிடங்கள் ஏற்படாமல் தடுக்க  நடவடிக்கை" - அமைச்சர் பொன்முடி தகவல்!

 

பொறியியல் கல்லூரிகளில் காலியிடங்கள் ஏற்படாமல் தடுக்கும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். 

இந்நிலையில் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, "பொது பிரிவு கலந்தாய்வில் பங்கேற்ற 5165 மாணவர்களில் 2765 பேர் அண்ணா பல்கலைக்கழகத்தில் சேர விருப்பம் தெரிவித்துள்ளனர் .அரசு பள்ளி மாணவர்களுக்கான7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டில் இதுவரை 23 ஆயிரத்து 321 பேர் விண்ணப்பங்கள் வந்துள்ளது.  7.5% ஒதுக்கீட்டில் 11,150 அரசு பள்ளி மாணவர்களுக்கு இடங்களை ஒதுக்கலாம்.  பொறியியல் கல்லூரிகளில் காலியிடங்களை தொடங்கும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

3,5,8ம் வகுப்புக்கு மத்திய அரசு பொது தேர்வு கொண்டு வர இருப்பது பற்றி மாணவர்களிடம் கேட்டால், அவர்கள் வேண்டாம் என்கிறார்கள்;இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் உயர்கல்வி பயில்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளன. பாலிடெக்னிக் கல்லூரிகளில் படித்த மாணவர்களை 2ம் ஆண்டில் எல்லா கல்லூரிகளிலும் சேர்த்து வந்தனர்; இது அண்ணா பல்கலைக்கழகத்திலும் இனி நடைபெறும்" என்றார்.