×

#BREAKING மயிலாடுதுறை மாவட்ட இந்த வட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை

 

தமிழகத்தில் கடந்த 10 தினங்களாக வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. தொடர் மழையின் காரணமாக தமிழகத்தில் மயிலாடுதுறை, தஞ்சாவூர், கடலூர், பெரம்பலூர், திருவள்ளூர், கன்னியாகுமரி போன்ற பல்வேறு மாவட்டங்களில் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் சம்பா பயிர்கள் மழை நீரில் மூழ்கியுள்ளன. ஆயிரக்கணக்கான கால்நடைகள் பாதிக்கப்பட்டுள்ளது. பல்லாயிரக்கணக்கான வீடுகள் மழை நீரால் சூழப்பட்டுள்ளது. 

குறிப்பாக கடந்த 10ம் தேதி 122 ஆண்டுகளாக இல்லாத அளவிற்கு சீர்காழி தாலுகாவில் 44 சென்டிமீட்டர் அளவிற்கு மழை பெய்ததால், மயிலாடுதுறை மாவட்டத்தில் மட்டும் 90 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. 20,000 மேற்பட்ட குடியிருப்புகள் மழை நீரால் சூழப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான கால்நடைகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. மாவட்டத்தில் நான்கு வழி சாலை, புறவழிச் சாலை போன்ற சாலை பணிகளால் வடிகால் வாய்க்கால்கள் அடைப்பு ஏற்பட்டதாலும், தூர்வாரும் பணி முழுமையாக நடைபெறாததாலும் மயிலாடுதுறை மாவட்டம் மிகப்பெரிய பேரழிவுக்கு உள்ளாகியுள்ளது. 

இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தற்கு உட்பட்ட சீர்காழி, தரங்கம்பாடி வட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கும் மட்டும் நாளை (15/11/2022) ஒரு நாள் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா உத்தரவிட்டுள்ளார்.