×

இதனால் மனைவி, குழந்தைகளை கவனிக்க முடியல -புலம்பும் கொடநாடு குற்றவாளி மனோஜ்  

 

தனக்கு விதிக்கப்பட்ட ஜாமீன் நிபந்தனைகளை தளர்த்தக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனோஜ் மனு தாக்கல் செய்திருப்பதால் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது.

 மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான கோத்தகிரியில் இருக்கும் கொடநாடு பங்களாவில் கடந்த 2017 ஆம் ஆண்டில் கொலை ,கொள்ளை சம்பவம் நிகழ்ந்தது.  இந்த சம்பவங்கள் தொடர்பாக மனோஜ் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.   இந்த வழக்கில் மனோஜ்க்கு நீலகிரி நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கி இருந்தது.   நீலகிரியிலேயே அவர் தங்கியிருக்க வேண்டும் என்று நிபந்தனைகளையும் விதித்து இருந்தது.

 தனக்கு வழங்கப்பட்ட ஜாமினில் தளர்வு கோரி மனோஜ் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீலகிரி நீதிமன்றம்,  கேரள மாநிலம் திருச்சூரில் தங்கியிருந்து வாரத்தில் இரண்டு நாட்கள் காவல் நிலையத்திற்கு வந்து கையெழுத்திட நிபந்தனை விதித்தது.  இந்த நிபந்தனையையும் தளர்த்த வேண்டும் என்று நீலகிரி நீதிமன்றத்தில் கூறினார் மனோஜ்.   ஆனால் நீலகிரி நீதிமன்றம் அதற்கு மறுத்ததை எதிர்த்து மனோஜ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

 அவர் தாக்கல் செய்துள்ள மனுவில்,   நீதிமன்ற உத்தரவுபடி ஒவ்வொரு திங்கள்கிழமை,  புதன்கிழமைகளில் திருச்சூர் காவல் நிலையத்தில் ஆஜராகி வருகிறேன். உடல்நல குறைவு காரணமாக பாதிக்கப்பட்டு உள்ள மனைவியையும் குழந்தைகளையும் கவனித்துக் கொள்ள முடியாததால் வாரத்தில் இரண்டு நாட்கள் காவல் நிலையம் செல்வதால் கூலி வேலைக்கும் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.   ஆகவே ஜாமீன் நிபந்தனைகளில் தளர்த்த வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

 இந்த மனுவை விசாரித்து நீதிபதி ஜெகதீசன் சந்திரா இது குறித்து போலீசார் பதில் அளிக்க உத்தரவிட்டு,  மனு மீதான மறு விசாரணையை வரும் ஒன்பதாம் தேதி ஒத்தி வைத்துள்ளார்.