×

எஸ்.பி.வேலுமணியின் வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் கையாளும் விதம் சரியில்லை- உச்சநீதிமன்றம்

 

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது தொடரப்பட்டுள்ள டெண்டர் முறைகேடு மற்றும் சொத்து குவிப்பு வழக்குகளை  சென்னை உயர்நீதிமன்றம் விசாரிக்கலாம் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. எஸ்.பி.வேலுமயின் வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் கையாளும் விதம் சரியில்லை என்று மீண்டும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு எதிராக தொடரப்பட்டுள்ள டெண்டர் முறைகேடு வழக்கு விசாரணைக்கு  தடைவிதிக்க முடியாது, லஞ்சஒழிப்புத் துறை விசாரணை அறிக்கை அடிப்படையில் விசாரணை நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் சில மாதங்களுக்கு முன்  உததரவிட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்றத்தில்  வழக்கு விசாரணை நடைபெற்றுவருகிறது. தன்மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி எஸ்.பி.வேலுமணி தொடர்ந்த வழக்கை  டிவிசன் அமர்வு விசாரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்ததை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்தது. இந்நிலையில்  இதனை எதிர்த்து தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை  தரப்பில் உச்ச நீதிமன்றத்தில்  மேல்முறையீட்டு மனு தாக்கல்  செய்யப்பட்ட தி.  இந்த மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அஜய் ரஸ்தோகி பி வி நாகரத்னா அமர்வில் இன்று விசாரணை நடைபெற்றது.

அப்போது எஸ்பி வேலுமணி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்துகி, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எந்த வழக்கையும் விசாரிக்க அதிகாரம் உண்டு, ஏனெனில் அவர் தான் மாஸ்டர் ஆஃப் ரோஸ்டர் எனவும் மத்திய அரசு வழக்கறிஞர் குற்றம்சாட்டப்பட்டவருக்கு ஆஜராக க்கூடாது என தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் வாதிடுகின்றனர். ஆனால் மத்திய அரசு வழக்கறிஞர் தனியார் வழக்குகளை தனிப்பட்ட முறையில் நடத்தக்கூடாதா ?  ஏன் காவல்துறை தரப்பு இதனை எதிர்கிறது என கேள்வி எழுப்பினார். மேலும் மாஸ்டர் ஆஃப் ரோஸ்டர் என்ற அடிப்படையில் எந்த வழக்கையும் விசாரிக்க உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அதிகாரம் உண்டு என வாதிட்டனர். அப்போது நீதிபதிகள்,  தனி நீதிபதி அமர்வில் உள்ள எந்த வழக்கையும் தலைமை நீதிபதி தன் அமர்வுக்கு மாற்றி விசாசாரிக்க அவருக்கு அதிகாரம் உண்டு என தெரிவித்தனர். 

அப்போது தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பு ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், இந்த வழக்கில் உச்சநீதிமன்ற உத்தரவுபடி தான் பொதுநல வழக்கு மீண்டும் எடுக்கப்பட்டு வேலுமணிக்கு முதல்நிலை விசாரணை அறிக்கை கொடுக்கப்பட்டது. ஆனால் முறைகேடு தொடர்புடைய வழக்கில் பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட கிரிமினல் வழக்கை எவ்வாறு பொதுநல வழக்குடன் விசாரிக்க முடியும்? என கேள்வி எழுப்பியதோடு அவ்வாறு முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக்கோரிய வேலுமணியின் மனு தனி நீதிபதி அல்லது எம்.பி, எம்.எல்.ஏ.க்களை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் தான் விசாரிக்க வேண்டும். எனவே தான் பொதுநல மனுவை விசாரிக்கும் டிவிசன் அமர்வு வேலுமணி முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக்கோரிய மனுவை விசாரிக்க எதிர்ப்பு தெரிவிக்கிறோம் என வாதிட்டார்.

மேலும், ஏன் இந்த வழக்கை இவ்வளவு அவசரமாக சென்னை உயர்நீதிமன்ற டிவிசன் பெஞ்ச் விசாரிக்க வேண்டும், அப்படி என்ன இந்த வழக்கில் இருக்கிறது ? என லஞ்ச ஒழிப்புத்துறை சார்ப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில்சிபில் கேள்வி எழுப்பினார். குறிப்பாக, இந்த வழக்கில் எவ்வாறு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி  பொதுநல வழக்கையும், வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்குவித்த வழக்கையும் இணைத்து விசாரிக்க முடியும்? எனவும் தலைமை நீதிபதி மாஸ்டர் ஆஃப் ரோஸ்டர் என்ற அடிப்படையில் நிர்வாக ரீதியிலான உத்தரவை பிறப்பித்தாலும், இந்த விவகாரத்தில் அந்த உத்தரவை எதிர்ரத்து மேல்முறையீடு  செய்ய முடியும் என கூறினார். 

இரு தரப்பு வாதங்களையும் கேட்டதற்கு பிறகு உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள், வேலுமணி தன் மீதான முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய கோரியது தொடர்பான இந்த வழக்கை உயர்நீதிமன்ற டிவிசன் அமர்வே விசாரிக்கும் என்வும் நீதிமன்றம் மீது தேவையற்ற விசாரணையை வைக்க வேண்டாம் என கூறி வழக்கை தள்ளுபடி செய்தனர். இதனால் செப்டம்பர் 19ம் தேதி இது தொடர்பான வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்தின் டிவிஷன் அமர்வு தொடர்ந்து விசாரிக்கலாம் என்பது உறுதியாகிறது.