×

எம்.பியான இளையராஜா..  மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வாழ்த்து..

 

மாநிலங்களவை நியமன எம்.பி.யாக  இன்று பதவியேற்றுக்கொண்ட இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு ,  மத்திய இணையமைச்சர் எல்.முருகன்  வாழ்த்து தெரிவித்தார்.

மாநிலங்களவை நியமன எம்.பி.யாக இசையமைப்பாளர் இளையராஜா கடந்த ஜூலை 6ஆம் தேதி தேர்ந்தெடுக்கப்பட்டார்.   அவருடன் தடகள வீராங்கனை பிடி உஷா, சமூக ஆர்வலரான வீரேந்திர ஹெக்டே, இயக்குநர் ராஜமவுலியின் தந்தையும் திரைக்கதை ஆசிரியருமான விஜயேந்திர பிரசாத் உள்ளிட்டோரும்  மாநிலங்களவை நியமன  எம்.பிக்களாக  நியமிக்கப்பட்டனர். நியமன உறுப்பினர்களான பிடி உஷா உள்ளிட்ட பலரும் கடந்த வாரம் பதவியேற்றுக்கொண்ட நிலையில், இசைநிகழ்ச்சிக்காக அமெரிக்கா சென்றிருந்த இளையராஜா கடந்தவாரம் பதவியேற்றுக் கொள்ளவில்லை.
 
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், இன்று  இளையராஜா நியமன  எம்.பி., யாக மாநிலங்களவையில் இன்று (ஜூலை 23) பதவியேற்றுக்கொண்டார். மாநிலங்களவைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங் முன்னிலையில்,  இளையராஜா தமிழில் பதவியேற்றுக்கொண்டார்.  மாநிலங்களவை சபாநாயகரும், துணை குடியரசு தலைவருமான வெங்கையா நாயுடு இளையராஜாவிற்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.  மாநிலங்களவை எம்.பியாக பதவியேற்றுக்கொண்ட இசையமைப்பாளர் இளையாராஜாவுக்கு , மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் சால்வை அணிவித்து  வாழ்த்து தெரிவித்தார்!