×

தமிழகத்தில் 4 முதலைச்சர்களா? எடப்பாடி பழனிசாமிக்கு முதல்வர் முக ஸ்டாலின் பதில்

 

சென்னை மறைமலைநகரில் நடைபெரும் அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் 4வது மாநில மாநாட்டில்  தி.மு.க. தலைவரும், முதலைமைச்சருமான மு.க.ஸ்டாலின் 
அமைச்சர்கள் கே.என்.நேரு, தா.மோ.அன்பரசன், மார்க்சிஸ்ட் கம்னியூஸ்ட் கட்சியின் மாநில பொதுசெயளாலர் பாலகிருஷ்ணன், செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 

நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “தலைவர் கலைஞர் வைத்திருந்த பாச உணர்வோடு உங்களது அழைப்பை ஏற்று வந்துள்ளேன் தேர்தல் காலத்தில் மட்டும் சந்திக்க மட்டும் அல்ல. உங்கள் மீது கொண்ட பெரும் பாசத்தால் வந்துள்ளேன். மாற்றுத்திறனாளிகள் மீது அன்பு கொள்ள வேண்டும். அவர்மீது அக்கரை எடுத்து கொள்ள வேண்டும். தமிழக முதல்வராக  அமர்ந்த 15 மாதங்களில் சுமார் 759 கோடியில் பல்வேறு நலதிட்ட உதவிகளை திமுக அரசு கொண்டுவந்துள்ளது. உங்களது குறையை தீர்க்க கருவியை பயன்படுத்துவது போல உங்களுக்கு உறுதுணையாக நான் இருப்பேன். ஒரு திறன் குறைந்தாலும் அனைத்திலும் சாதிக்க நினைக்கிறவர்கள் நீங்கள்.

தமிழ்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சொல்வதை போல்  தமிழகத்தின்  4 முதலமைச்சர் இல்லை, எங்களுக்கு யார்  நல்ல ஆலோசனைகள் வழங்குகிறார்களோ, அந்த ஆலோசனைகள் எல்லாம் செயல் வடிவம் பெறுகிறதோ, அவை அனைத்தையும் சேர்த்தது தான் இந்த ஆட்சி நடைபெற்று வருகிறது. இதுதான் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி” எனக் கூறினார்.