×

ஈபிஎஸ்-ஐ அடிக்கடி மிரட்டும் சிவி சண்முகம்

 

ஆர்.பி உதயகுமார் திருமங்கலம் தொகுதியில் மீண்டும் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டால் அரசியல் வாழ்க்கையிலிருந்து விடைபெறுகிறேன் என தெரிவித்த ஓபிஎஸ் ஆதரவாளரான கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.

சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி, “ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வீட்டை சூறையாடுவேன் என ஆர்.பி. உதயகுமார் கூறியதற்கு நாளை கமிஷனர் அலுவலகத்திற்கு சென்று  புகார் கொடுக்கப்படும், ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் வீட்டை அல்ல அவர் வீட்டின் நிழலை கூட தொட முடியாது என எச்சரித்தார். ஆர்.பி உதயகுமார் பிடிக்காதே கால்களே இல்லை. ஜெயலலிதா பிறகு பொதுச்செயலாளராக சசிகலா. சசிகலா தான் என்று பேசினார். பின்னர் எடப்பாடிக்கு துதி பாடி வருகிறார்.


ஆர்.பி.உதயகுமார் - ஓ.பி.ரவீந்திரன் வகித்து வரக்கூடிய நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து தேர்தலில் வெற்றி பெற்று கட்ட முடியுமா? ஆனால் அவருடைய திருமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து அங்கு தேர்தலை சந்தித்து வெற்றி பெற்றால்  நான் அரசியலில் இருந்து விலகுகிறேன். அதிமுக சார்பாக ஒரே ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் தான் கட்சிக்கு உள்ளார் அது ரவீந்திரன் அவர் வெற்றிக்கு தொண்டர்கள் தான் காரணம், அதை நாங்களும் ஏற்கிறோம் ஆனால் மீதம் உள்ள 38 இடங்களின் தோல்விக்கு எடப்பாடி பழனிசாமி தான் காரணம். இப்போதெல்லாம் எடப்பாடி பழனிச்சாமியை சி.வி சண்முகம் அடிக்கடி மிரட்டி வருகிறார். ஏனென்றால் எடப்பாடி பொதுச்செயலாளராக தேர்வு செய்ததில் எனக்கு முக்கிய பங்கு இருக்கிறது எனக் கூறி மிரட்டி வருகிறார், சசிகலா அதிமுகவில் கட்சியில் தொடர்கிறார் என்று சொல்கிறார்கள் !?ஓ.பி.எஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள் அவர்கள் மீண்டும் சேர்ந்து கொண்டு பணிகளை தொடரலாம் என்று சொல்லியுள்ளார், அதன் அடிப்படையில் சசிகலாவை தவிர அனைவரும் கட்சிக்கு சேர்ந்து பாடுபடுவார்கள்” என தெரிவித்தார்.