×

"வாழ்த்துகிறேன் தம்பி உதயநிதி அமைச்சர் ஆகியிருக்கிறீர்கள் " - கமல் ஹாசன் வாழ்த்து!!

 

அமைச்சராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு நடிகர் கமல் ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

திமுக இளைஞரணி செயலாளரும் , சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் இன்று தமிழகத்தின் 35ஆவது அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார் . அவருக்கு தமிழக அமைச்சரவையில்  இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  சென்னை தலைமை செயலகத்திற்கு சென்ற அவர் அமைச்சர் பொறுப்பை ஏற்றுக்கொண்ட நிலையில் கோப்புகளில் கையெழுத்திட்டார். புதிய அமைச்சர் உதயநிதிக்கு மூத்த அமைச்சர்கள், நிர்வாகிகள் தங்கள் வாழ்த்தினை தெரிவித்து கொண்டனர்.

இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் தலைவரும், நடிகருமான கமல் ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், "வாழ்த்துகிறேன் தம்பி  உதயநிதி ஸ்டாலின். அமைச்சர் ஆகியிருக்கிறீர்கள். அதைப் பதவியென எண்ணாமல், பொறுப்பென்று ஏற்பீர்கள் எனவும், மூன்று தலைமுறை அனுபவமும் உங்களுக்கு உதவும் எனவும் நம்புகிறேன். எதிர்பார்ப்புகள் உள்ளன. நிறைவேற்றுவதில் உங்கள் வெற்றி உள்ளது." என்று பதிவிட்டுள்ளார்.

null