×

காசி சங்கமம் என்ற பெயரில் மாணவர்களை ஆர்எஸ்எஸ் அமைப்பில் சேர்க்க பாஜக முயற்சி- கே. பாலகிருஷ்ணன்

 

காசி சங்கமம் என்ற பெயரில் தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை ஆர்.எஸ்.எஸ்  சார்பில் பயிற்சி அளிக்க பாஜக திட்டமிட்டுள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், “தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால்  தொடர்ந்து தாக்கப்பட்டு வருகின்றனர். அவர்களது வலைகள்,  படகுகள் சேதப்படுத்தப்பட்டு வருகின்றன. இலங்கை கடற்படையினரின் இந்த நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தக்கோரி தமிழக அரசு சார்பிலும் அரசியல் கட்சியில் சார்பிலும் மத்திய அரசுக்கு பலமுறை கடிதம் எழுதப்பட்டுள்ளது, ஆனாலும் மத்திய அரசு  இந்த விவகாரத்தில் ஒரு துருப்பைக்கூட  அசைக்கவில்லை. இலங்கை அரசாங்கத்துடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஏழு பேர் உச்ச நீதிமன்றத்தின் மூலம் விடுதலை செய்யப்பட்டனர். அதற்கு எதிராக மத்திய அரசு நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது. இதன் மூலம் 7 ஏழு பேர் விடுதலை காலதாமதம் ஆனதற்கு மத்திய அரசே காரணம் என்பது தெளிவாகிறது. 

காசி சங்கமம் என்ற பெயரில் ஐஐடி மாணவர்கள் 2,500 பேரை காவி துண்டைப் பொருத்தி கவர்னர் மற்றும் மத்திய அமைச்சர்கள் ரயில் மூலம் வழி அனுப்பி வைத்துள்ளனர், இந்த நிகழ்ச்சியை மத்திய மாநில அரசுகள் சார்பில் ஏற்பாடு செய்யப்படவில்லை காசி சங்கமம் என்ற பெயரில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை ஆர் எஸ் எஸ் இயக்கத்தில் சேர்க்கும் பயிற்சி கூடமாக பகிரங்கமாக செயல்பட்டு வருகிறது.  இதனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இதனை வண்மையாக கண்டிக்கின்றேன். ஆர்எஸ்எஸ் மற்றும் ஆளுநர் பகிரங்கமாக செய்து வருகின்றனர். இது தொடரும் பட்சத்தில் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ரயில் மறியல் மற்றும் போராட்டம் நடத்தப்படும். இதனை தமிழக அரசும் கல்வித்துறையும் வேடிக்கை பார்க்க கூடாது.இதனை தடுத்து நிறுத்த வேண்டும். 

மத்திய அரசு அலுவலகங்களில் ஹிந்தி குழு அமைக்கப்பட்டு ஹிந்தி மொழியின் பயன்பாடு குறித்து மதிப்பீட்டு செய்யப்பட்டு வருகிறது. 1976ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட ஆட்சி மொழி செயலாக்க சட்டத்தில் தமிழகத்திற்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதனை பின்பற்றி ஹிந்தி குழு செயல்பாடுகளை தடுக்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் அழுவல் மொழியாக 100% தமிழ்  மொழி இல்லை அரசாணைகள் தமிழில் வெளியிடப்படுவது இல்லை. தமிழகத்தில் தமிழுக்கு கொடுக்கக்கூடிய முக்கியத்துவத்தை விட ஆங்கிலத்திற்கு தான் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. ஹிந்தியை போன்று ஆங்கிலத்தையும் திணிக்கும் முயற்சிகளை கைவிட வேண்டும். ஹவுஸ் சோர்சிங் மூலம் பணி நியமனம் செய்யும் ஆணையை திரும்ப பெறப்படும் என தமிழக முதல்வர் உறுதி அளித்துள்ளார். ஆனாலும் தமிழக முதல்வருக்கு தெரியாமல் அரசாணை எப்படி வெளியானது 69 சதவிகித இட ஒதுக்கீடு மூலம் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டால் சமூக நீதி பெரும் கேள்விக்குறியாகும் தொகுப்பு ஊதியம்  மதிப்பூதியம் பெறும் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். 

மெகா கூட்டணி என்பது கட்சிகளை சேர்ப்பது அல்ல, மக்களின் ஆதரவு யாருக்கு உள்ளதோ அதுதான் மெகா கூட்டணி. முகவரி இல்லாத பல கட்சிகளை சேர்ப்பதால் எடப்பாடி பழனிச்சாமி கூட்டணி மெகா கூட்டணி ஆகாது. தமிழகத்தில் எடப்பாடியின் மவுசு கூடிவிடவில்லை, பாஜகவின் மவுசும் கூடிவிடவில்லை. ஆகவே அவர்களுக்கு பெரிய அளவில் ஆதரவு தமிழகத்தில் கிடையாது. திமுக தலைமையில் உருவாகி உள்ள மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியே மெகா கூட்டணி கூட்டணியில் புதிதாக கட்சி வந்தால் சேர்க்கப்படும்” என பேசினார்.