×

பாஜக ஆட்சியில் ஊடகங்களுக்கு சுதந்திரம் இல்லை - ஜோதிமணி எம்பி

 

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே பூத்தாம்பட்டியில் 300க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் கரூர் பாராளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி அவர்கள் கலந்து கொண்டார். 

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஜோதிமணி எம்பி, “பிரஸ் ஃப்ரீடம் இன்டெக்ஸ் வெளியிடப்பட்ட கருத்துக்கணிப்பில் உலக நாடுகள் தரவரிசை பட்டியலில் ஆப்கானிஸ்தான்,பாகிஸ்தான் நாடுகளுக்கு அடுத்தபடியாக தரவரிசை பட்டியலில் இந்தியா கீழே உள்ளது. அந்த அளவிற்கு மோசமாக ஊடகங்களுக்கு சுதந்திரம் இல்லாத சூழ்நிலை நிலவுகிறது. தனிப்பட்ட முறையில் ஊடகவியாளர்கள் ஊடகங்கள் போடப்படும் ட்வீட் நீக்கப்பட்டு வருகின்றன, குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் செய்தித் துறையில் போடப்படும் ட்விட்டை நீக்கப்பட்டால் செய்திகள் எவ்வாறு மக்களுக்கு சென்றடையும். 

கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்திற்கு ட்விட்டர் நிறுவனம் நாடி உள்ளது, அந்த விசாரணை வெளிப்படையாக நடந்தால் இந்த ஒன்றிய அரசு எவ்வளவு தூரம் ஊடகங்களை எவ்வளவு தூரம் ஒடுக்கிறது. அடக்கு முறையை ஊடகங்கள் மீது ஏவி விடப்படுகிறது என தெரிந்துவிடும் என ஒன்றிய அரசு மறைமுகமாக விசாரிக்க வேண்டும் கேட்பதை தொடர்ந்து இதுவே இந்த ஒன்றிய அரசு வெளிப்படை தன்மை இல்லாத இருப்பதற்கு ஒரு உதாரணம். தமிழக மற்றும் தேசிய அளவில் இருக்கும் ஊடகவியலாளர்கள் உண்மையை உரக்க மக்களிடம் கூற வேண்டும், அப்பொழுதுதான் கருத்து சுதந்திரம் உள்ள ஜனநாயக நாடாக இந்தியாவை நடத்த முடியும். இல்லையெனில் ஊடகம் மற்றும் ஊடகவியலாளர்கள் நரேந்திர மோடி அவர்களுக்கு ஆர்எஸ்எஸ் ஆக மாறிவிடும் ஆபத்து இருக்கிறது. இந்த ஆபத்திலிருந்து காப்பாற்றப்பட வேண்டும். அதற்கு மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி உறுதுணையாக இருக்கும்” எனக் கூறினார்.