×

"கடைசியில் இந்தி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதி" - வைரமுத்து காட்டம்!!

 

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை  மற்றும் மருத்துவ கல்லூரிகளில் பயன்படுத்தப்படும் அனைத்து அலுவலக பதிவேடுகள், பணியாளர் புத்தகம் ,பணியாளர் பதிவுகள் அனைத்தும் இந்தி மற்றும் ஆங்கில மொழியில் மட்டுமே இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. எதிர்காலத்தில் இந்தி மொழியில் மட்டுமே இவை அனைத்தும் பயன்படுத்த வேண்டும்.  

அனைத்து துறை தலைவர்கள் பிரிவு ஊழியர்களுக்கான பொறுப்பு நபர்கள் இதற்கேற்ப தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஏதேனும் உதவி தேவை எனில் இந்தி  பிரிவை தொடர்பு கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.  ஜிப்மர் மருத்துவமனையில் இந்தி மொழியை கட்டாயமாக்கும் வகையில் நிர்வாகம் பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.


இந்நிலையில் கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில், 

கடைசியில் இந்தி
ஜிப்மர் மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டிருக்கிறது;
வருந்துகிறோம்

இந்தி படிப்போரை
வெறுக்கமாட்டோம்;
திணிப்போரை
ரசிக்கமாட்டோம்

ஒருமைப்பாடு
சிறுமைப்படாதிருக்க
நாட்டின் பன்மைக்கலாசாரம்
பாதுகாக்கப்படவேண்டும்

சிலர்
நுழைக்கப்பார்ப்பது
ஊசியில் நூலன்று;
ஒட்டகம்

நுழையாது " என்று பதிவிட்டுள்ளார்.