×

“சட்டத்தையும் தாண்டி சமூகத்தையும் படிக்க வேண்டும்” - முதல்வர் ஸ்டாலின் 

 

அடிப்படை உரிமைகளை காக்க மாணவர்கள் தங்களது படிப்பை பயன்படுத்த வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

 அம்பேத்கர் சட்டப் பல்கலை.யின் கல்வெட்டை திறந்து வைத்து வெள்ளி விழா மலரை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இதையடுத்து அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் வெள்ளி விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், சட்டப்படிப்பு உட்பட உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ₨1000 வழங்கப்படுகிறது. சட்டப்படிப்புக்கென தெற்காசியாவில் முதன்முறையாக தொடங்கப்பட்ட பெருமைமிகு பல்கலைக்கழகம் இது. அம்பேத்கரின் பெயரில் சட்டப் பல்கலைக்கழகம் நிறுவிய முதல் மாநிலம் தமிழ்நாடு. சஅரசு சட்டக்கல்லூரி மூலம் கிராமப்புற மாணவர்கள் எளிதாக சட்டம் பயின்று வருகின்றனர். சட்டப் பல்கலைக்கழகம் மேலும் பல சட்ட மாமேதைகளை உருவாக்க வேண்டும்.வாதத்திறமையை ஏழை, எளிய மக்களின் நலன்களுக்காக பயன்படுத்த வேண்டும். அரசியலமைப்பு வழங்கியுள்ள உரிமைகளையும், சமூக நீதியையும் நிலைநாட்டும் வகையில் வழக்கறிஞர்கள் செயல்பட வேண்டும்.சட்டம் தாண்டி, சமூகத்தையும் சட்ட மாணவர்கள் படிக்க வேண்டும். நீதிக்கு வெற்றி தேடித்தரும் வழக்கறிஞர்களாக இருக்க வேண்டும்.

அடிப்படை உரிமைகளை காக்க மாணவர்கள் தங்கள்கல்வியை பயன்படுத்த வேண்டும்; சட்டத்தையும் தாண்டி சமூகத்தையும் படிக்க வேண்டும்; சட்ட நீதியை மட்டும் அல்ல சமூக நீதியையும் நிலைநாட்டுபவர்களாக மாணவர்கள் திகழ வேண்டும் என்றார்.