×

சென்னையில் காணும் பொங்கலை முன்னிட்டு போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு

 

சென்னையில் காணும் பொங்கல் விழாவையொட்டி போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். 


சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் புதிய கண்காணிப்பு அறை மற்றும் 28 கேமரா, மெரினாவில் 4 காவல் உதவி மையங்களை சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் திறந்து வைத்தார்.

அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், “சென்னையில் கடற்கரையில் உயிர் இழப்பு குறைந்துள்ளது. இன்னும் கூடுதலாக ட்ரோன் கேமரா வந்ததும்  உயிர் இழப்பு முழுமையாக குறைய வாய்ப்பு இருக்கிறது. காணும் பொங்கல் விழாவை யொட்டி மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. சென்னையில் காணும் பொங்கல் விழாவையொட்டி கடற்கரையில் 1,200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். 

சென்னையில் மெரினா கடற்கரை மணல் பரப்பில் குதிரைப்படை மற்றும் 4 காவல் உதவி மையங்கள் அமைத்து கண்காணிக்க உள்ளனர். போலீஸ் ரோந்து வாகனம் மூலமும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.சென்னை கடற்கரையையொட்டி உள்ள பகுதியை  ட்ரோன் யூனிட் மூலமாக தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறோம். பொது மக்கள் தங்கள் குழந்தைகளை கடற்கரை மணல் பரப்பிற்கு அழைத்து வரும்போது  காணமல் போனால் உடனடியாக தெரிந்து கொள்ளும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது” என தெரிவித்தார்.