ஆர்த்தி ஸ்கேன் மையத்தில் 24 மணி நேரத்துக்கும் மேலாக நீடிக்கும் வருமான வரி சோதனை
கோவில்பட்டியில் ஆர்த்தி ஸ்கேன், ஆர்த்தி மருத்துவமனை, ஆர்த்தி திருமண மண்டபம் உள்ளிட்ட இடங்களில் 2வது நாளாக 24 மணி நேரத்துக்கு மேலாக தொடர்ந்து வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது
தமிழகத்தில் சென்னை வடபழனி தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஆர்த்தி ஸ்கேன் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும் வரிஏய்ப்பு செய்ததாகும் புகார் வந்ததையடுத்து வருமான வரித்துறையினர் நேற்று காலை முதல் தமிழகம் முழுவதும் 20க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள ஆர்த்தி ஸ்கேன், ஆர்த்தி மருத்துவமனை மற்றும் ஆர்த்தி திருமண மண்டபம், ஸ்கேன் நிறுவன உரிமையாளர் கோவிந்தராஜ் இல்லம் உள்ளிட்ட இடங்களில் நேற்று காலை முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
தொடர்ந்து 2வது நாளாக 24 மணி நேரத்துக்கு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்று வரும் சோதனையில் அங்கு பணியாற்றிவரும் மேலாளர் மற்றும் ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டும் முக்கிய ஆவணங்களை கை பற்றியும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து இரவிலும் இந்த சோதனையானது நடைபெற்று வருகிறது. கோவில்பட்டிக்கு 6 குழுக்களாக வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.