×

அன்புச்செழியன் வீட்டில் 15 மணிநேரத்துக்கும் மேலாக வருமான வரித்துறையினர் சோதனை

 

பிரபல சினிமா தயாரிப்பாளர்களான அன்பு செழியன், கலைப்புலி தாணு, எஸ் ஆர் பிரபு, ஞானவேல் ராஜா, ஆகியோருக்கு சொந்தமான  40க்கும் மேற்பட்ட இடங்களில்  வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இன்று காலை முதல் சென்னை மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில்  40க்கும் மேற்பட்ட  இடங்களில் வருமான வரிதுறையினர்  சோதனை நடத்தி வருகின்றனர். 

வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக பிரபல தயாரிப்பாளர்களான அன்புச்செழியன் கலைப்புலி தானு, எஸ் ஆர் பிரபு, ஞானவேல் ராஜா ஆகியோருக்கு சொந்தமான பத்திற்கும் மேற்பட்ட இடங்களில் சென்னையில் வருமான வரித்துறை சோதனை பெற்று வருகிறது. தயாரிப்பாளரும் பைனான்சியருமான அன்புச் செழியனுக்கு சொந்தமான மதுரை மற்றும் சென்னையில் உள்ள அவரது அலுவலகங்கள் இல்லங்களில் 15 மணிநேரத்துக்கும் மேலாக சோதனை நடைபெற்று வருகிறது. அதிகாலை 6 மணிக்கு தொடங்கிய சோதனை தற்போதுவரை தொடர்கிறது.

குறிப்பாக சென்னை தி நகர் ராகவையா சாலையில் உள்ள கோபுரம் பிலிம்ஸ், நிறுவன அலுவலகம் அதே சாலையில் உள்ள அன்புச் செழியன் இல்லம், நுங்கம்பாக்கம் காம்தார் தெருவில் உள்ள அன்புச் செழியன் உறவினர் வீடு உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.தி நகர் பிரகாசம் சாலையில் உள்ள தயாரிப்பு நிறுவன அலுவலகம் மற்றும் ராஜா அண்ணாமலைபுரம் கற்பகம் அவனியில் உள்ள இல்லம் என கலைப்புலி தானுவிற்கு சொந்தமான இரண்டு இடங்களில் வருமானவரித் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

தயாரிப்பாளர்கள் எஸ்.ஆர். பிரபு மற்றும் ஞானவேல் ராஜா ஆகியோரின் இரு தயாரிப்பு நிறுவன அலுவலகங்கள் தி நகர் தனிகாச்சலம் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் செயல்பட்டு வருகிறது அங்கும் வருமானவரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பிரபல சினிமா தயாரிப்பாளர் சத்யஜோதி பிலிம்ஸ் தியாகராஜன் அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர். நடிகர் சூர்யாவின் சிங்கம் இரண்டாம் பாகம், நடிகர் கார்த்தியின் தேவ் மற்றும் வெளிவர உள்ள சர்தார் ஆகிய படங்களின் தயாரிப்பாளர் லக்ஷ்மன் என்பவரின் பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்திலும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.