×

பெரம்பலூர் நீதிமன்ற வளாகத்தில் மனைவியை கத்தியால் குத்திய கணவர்

 

பெரம்பலூரில் விவகரத்து வழக்கு தொடர்பான விசாரணைக்கு வந்த பெண்ணை நீதிமன்ற வளாகத்தினுள் அவரது கணவர் கத்தியால் குத்தி தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூர் அருகேயுள்ள பூலாம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் காமராஜ் - சுதா தம்பதி. இவர்களுக்கு திருமணமாகி 11 ஆண்டுகள் ஆன நிலையில் இரண்டு குழந்தைகள் இருப்பதாக கூறப்படுகிறது. இதனிடையே கணவன் மனைவியிடையே ஏற்பட்ட கருத்துவேறுபாட்டால் சட்ட ரீதியாக பிரிந்து செல்ல நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்குபதிவு செய்து கடந்த 7 ஆண்டுகளாக விசாரணை நடைபெற்று வருவதாக தெரிகிறது.

இந்நிலையில் இன்று வழக்கு விசாரனணக்காக பெரம்லூர் நீதிமன்றத்திற்கு வந்த சுதாவை அவரது கணவர் காமராஜ் தான்மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து நீதிமன்ற வளாகத்திற்குள்ளேயே சரமாரியாக முகத்தில் குத்தியுள்ளார். இதில் நெற்றி, தாவாய், ஆகிய இடங்களில் காயமடைந்த நிலையில் போலீஸார் தடுத்து நிறுத்தி காமராஜை கைது செய்தனர். மேலும் காயமடைந்த சுதாவை  மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பிவைத்தனர். இந்த திடீர் கத்தி குத்து சம்பவத்தால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. 

இந்த கத்திக்குத்து சம்பவத்தின்போது காமராஜை இடைமறித்தி சுதாவை காப்பாற்ற முற்பட்ட  காவலர்  அழகேசன் என்பவரது வலதுகையிலும் கத்தி கிழித்து காயம் ஏற்பட்டுள்ளது. காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் காவலர் அழகேசனை பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளார் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் நீதிமன்றத்தில் பணியிலிருந்த காவலர் அழகேசன் சமயோசிதமாக செயல்பட்டதால் ஒருகொலை தடுக்கப்பட்டுள்ளது , இதனால் ஒரு கொலைவழக்கு கொலை முயற்சி வழக்காக மாறியுள்ளது.