×

எஸ்.பி.வேலுமணி மனுக்கள் மீது இன்று விசாரணை

 

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.

கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் சென்னை ,கோவை மாநகராட்சிகளில் பணிகளின் டென்டர்களுக்கு தனக்கு நெருக்கமானவர்களுக்கு வழங்கியதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு எதிராக லஞ்ச ஒழிப்பு துறையினர் துறையில் அறப்போர் இயக்கம் மற்றும் திமுக தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி உயர் நீதிமன்றத்தில் கடந்த  2018 ஆம் ஆண்டு வழக்குகள் தொடரப்பட்டன.  ஆட்சி மாற்றத்திற்கு பிறகு சென்னை மற்றும் கோவையில் தலா ஒரு வழக்கு என செய்யப்பட்டது. இந்த இரு வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும் என எஸ்.பி. வேலுமணி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்குகளை ரத்து செய்யக் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையி,  இம்மனுவை சென்னை உயர்நீதிமன்றம் இன்று விசாரிக்கிறது. டெண்டர் முறைகேடு வழக்குகளை ரத்து செய்யக்கோரும் எஸ்.பி.வேலுமணியின் மனுக்களை இன்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு விசாரிக்கிறது .  கோவை, சென்னை மாநகராட்சி டெண்டர்களில் முறைகேடு என வேலுமணி மீது லஞ்ச ஒழிப்புத்துறை 2 வழக்குகள் பதிவு செய்துள்ளது. பொறுப்புத் தலைமை நீதிபதி எம்.துரைசாமி, நீதிபதி சுந்தர் மோகன் அமர்வில், இன்று வழக்கு விசாரணைக்கு வருவது குறிப்பிடத்தக்கது.