×

மருத்துவமனைகளை தயார் நிலையில் வைக்க வேண்டும் - சுகாதாரத்துறை செயலர் உத்தரவு

 

தமிழகத்தில் உள்ள மருத்துவமனைகளில் படுக்கைகள், ஆக்சிஜன் கலன்கள், மருத்துவ உபகரணங்கள் தயார் நிலையில் உள்ளதா என்பதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதி படுத்த வேண்டும் என சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார் 

இந்தியாவில் மே 27 ஆம்  தேதி வரையிலான ஒரு வாரத்தில் 15, 708 பேருக்கு கோவிட் உறுதியான நிலை  ஜுன் 3 ஆம் தேதி வரையிலான 21,055 பேருக்கு தொற்று ஏற்படும் அளவுக்கு அதிகரித்துள்ளது. அதே போல் கோவிட் தொற்று உறுதியாகும் சதவீதம் 0.52% லிருந்து 0.73%  ஆக அதிகரித்துள்ளது. இவற்றை கருத்தில் கொண்டு தமிழகத்திலும்  மீண்டும் கோவிட் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. பரிசோதனைகளை அதிகரித்தல், கூட்டுத் தொற்றுகளை உடனடியாக கண்டறிந்து  கட்டுப்படுத்துதல், மரபணு மாறிய புதிய கோவிட் வகை பரவுகிறதா என கண்டறிய் மரபணு பகுப்பாய்வு செய்தல் ஆகியவற்றை தொடர்ந்து மேற்கொள்ளவும், முதல்தவணை,  இரண்டாம் தவணை மற்றும் தகுதியானோருக்கு பூஸ்டர் தடுப்பூசி போடுவதை அதிகரிக்க வலியுறுத்ப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு கொரோனா சிகிச்சை பெருபவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. இருந்தாலும் மருத்துவமனைகளில் படுக்கைகள், ஆக்சிஜன் கான்சென்ட்ரேட்டர்கள், தேவையான மருத்துவ உபகரணங்கள் தயார் நிலையில் உள்ளதா என்பதை மாவட்ட நிர்வாகம் உறுதி படுத்திக்கொள்ள வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சித்தலைவர்கள் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையருக்கு மருத்துவத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் கடிதம் அனுப்பியுள்ளார்.