×

 புதிய உருமாறிய கொரோனா கண்டறியப்பட்டுள்ளதால மக்கள் விழிப்புடண் இருக்க வேண்டும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

 

லண்டனில் உருமாறிய கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என மருத்துவம் மற்றும் மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

சென்னை வளசரவாக்கத்தில் உள்ள நகர்ப்புற சமுதாய சுகாதார மையத்தில், கர்ப்பிணி பெண்களை பரிசோதனை செய்வதற்கான கலர் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் கருவிகள் மற்றும் நுரையீரல் செயல்பாட்டை கண்டறியும் ஸ்பைரோ மீட்டர் கருவிகளை பொது மக்கள் பயன்பாட்டிற்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் , சென்னை மாநகராட்சியின் மேயர் பிரியா மற்றும் துணை மேயர் மகேஷ் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 


 
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது ;  கோடை காலத்தில் பல்வேறு சுகாதார அறிவிப்புகள் செயல்படுத்த அறிவுறுத்தப்பட்டு வருகிறது.  ஆரம்ப சுகாதார நிலையத்தில் பல இடங்களில் மருத்துவர்கள் குறைபாடு என்பது இல்லை  கொரோனா காலத்தில் மினி கிளினிக் மருத்துவர்கள் மாற்று பணி கொடுக்க விதிமுறைகள் படி நடவடிக்கை எடுக்கப்படும். லண்டனில் உருமாறிய கொரோனா வந்துள்ளது. நாம் விழிப்புடன் இருக்க வேண்டும். ஆயினும் பயப்பட வேண்டாம். தற்போது தடுப்பூசியை பொறுத்த வரை 92  சதவீதம் முதல் தவணையும், இரண்டாம் தவணை 76 சதவீதமும் போடப்பட்டு உள்ளது.

50 ஆயிரம் இடங்களில் தடுப்பூசி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டு இதற்காக ஏராளமான மருத்துவ பணியாளர்கள் பயன்படுத்தப்பட்டும் மக்கள் குறைந்த அளவே தடுப்பூசி போடுகின்றனர். இன்னும் 3 அல்லது 4 வாரங்கள் பொறுத்து, வேறு வழிகளில் தடுப்பூசி போடுவது குறித்து முதல்வர் அறிவிப்பார் என்றும் கூறினார்.