×

காரைக்கால் கார்னிவெல் விழாவில் ரேக்ளா பந்தயம் 

 

காரைக்கால் கார்னிவெல் விழாவில்  ரேக்ளா ரேஸ் பந்தயம் நடைபெற்றது. 

காரைக்கால் மாவட்டத்தில் கடந்த ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு காரைக்கால் கார்னிவெல் நிகழ்ச்சி, கடந்த 15ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக காரைக்காலில் முதன்முறையாக குதிரைகள், மாடுகளுக்கான ரேக்ளா ரேஸ் பந்தயம் நடைபெற்றது. இதில் நாகப்பட்டினம், மயிலாடுதுறை, காரைக்கால் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்தும் குதிரைகள், வண்டிகளுடன் ஜாக்கிகள் கலந்து கொண்டனர். பெரிய குதிரை 16 கிலோமீட்டர் தூரமும், சிறிய குதிரை 12 கிலோமீட்டர் தூரமும், இரட்டை மாடுகள் 10 கிலோமீட்டர் தூரம் என மூன்று பிரிவுகளாக இந்த பந்தயம் நடத்தப்பட்டது. 

முன்னதாக குதிரைகள் மற்றும் மாடுகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. போட்டியின் போது குதிரைகள் துள்ளிக்குதித்து ஒடுவதைக் காண உள்ளூர், வெளியூர்  பார்வையாளர்கள் ஏராளமானோர் சாலையில் குவிந்திருந்தனர். காவல்துறையினர் பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து இருந்தனர். காரைக்கால் வீதிகளில் முதன்முறையாக குதிரைகளின் கொழும்பு சத்தம் தரையில் பட்டு எதிரொலித்தது, காரைக்கால் மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.